செய்திகள் உலகம்
மரணத்திற்குப் பின்னும் தொடரும் வன்முறை: 29 வயது இளம் தொழிலதிபரின் தலை மாயமானதால் அதிர்ச்சி
மிலன்:
இத்தாலியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொல்லப்பட்ட இளம் மாடல் அழகியும், தொழிலதிபருமான பமீலா ஜெனினியின் உடல் மீண்டும் சிதைக்கப்பட்ட செய்தி உலகையே உலுக்கியுள்ளது. 29 வயதான பமீலா, தனது வீட்டின் பால்கனியில் வைத்து முன்னாள் காதலனால் 24 முறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 52 வயதுடைய சந்தேக நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்த வழக்கில் ஒரு புதிய திருப்பமாக, புதைக்கப்பட்டிருந்த பமீலாவின் சடலத்திலிருந்து அவரது தலை துண்டிக்கப்பட்டுத் திருடப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மயானத் தொழிலாளர்கள் வழக்கமான ஆய்வை மேற்கொண்டபோது, சவப்பெட்டியின் திருகுகள் தளர்வாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பெட்டியைத் திறந்து பார்த்தபோது, சுமார் ஐந்து மாதங்களாகப் புதைக்கப்பட்டிருந்த சடலத்தின் தலை காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது.
மூன்று முதல் நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த இழிவான செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனப் போலிசார் சந்தேகிக்கின்றனர். உடலைச் சிதைத்தல், உடல் உறுப்புகளைத் திருடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தத் தலைத் திருட்டிற்கான பின்னணி, நோக்கம் குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.
முன்னதாக, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பமீலா தனது நண்பர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததும், அதன் பின்னரே அவர் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட பின்னரும் ஒரு பெண்ணின் உடல் இவ்வாறு அவமதிக்கப்பட்டிருப்பது இத்தாலிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 11:59 am
பொருளாதார நெருக்கடி: இலவச உணவுத் திட்டத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்கிறது இந்தோனேசியா
March 30, 2026, 10:59 am
ஈரானின் எண்ணெய் மையத்தை கைப்பற்றுவதை 'விரும்புவதாக' டிரம்ப் வெளிப்படுத்தினார்
March 29, 2026, 11:28 am
பெற்ற பிள்ளைகளை குளிர்சாதன பெட்டியில் பூட்டி வைத்த தாய்: 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
March 29, 2026, 10:30 am
"உங்களுக்குப் பொருட்கள் கிடையாது": இஸ்ரேலியப் பயணியைப் புறக்கணித்த கம்போடியக் கடை ஊழியர்
March 29, 2026, 10:03 am
ஈரான் - அமெரிக்கா மோதல் உச்சம்: வளைகுடா நாடுகளிலுள்ள கல்வி வளாகங்களை விட்டு வெளியேற உத்தரவு
March 28, 2026, 7:28 pm
ஈரான் நடத்திய தாக்குதல்களில் கடந்த இரு வாரங்களில் 13 அமெரிக்க வீரர்கள் பலி: 303 பேர் படுகாயம்
March 28, 2026, 12:02 pm
