நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

"உங்களுக்குப் பொருட்கள் கிடையாது": இஸ்ரேலியப் பயணியைப் புறக்கணித்த கம்போடியக் கடை ஊழியர்

ஃபனோம் பென்:

கம்போடியாவின் தலைநகரான பனோம் பென்னில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், இஸ்ரேலியச் சுற்றுலாப் பயணி ஒருவருக்குப் பொருட்களை விற்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்தப் பயணியின் குடியுரிமையை அறிந்தவுடன், அவருடனான வியாபாரத்தைத் தொடர அந்த ஊழியர் மறுக்கும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்ச் சூழலுக்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாகவே ஊழியர் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கருதப்படுகிறது.

இந்தக் காணொலி இணையவாசிகள் மத்தியில் இருவேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்த ஊழியரின் செயலைப் பாராட்டி வருகின்றனர். 

அதேவேளையில், மற்றொரு தரப்பினர் ஒரு நபரின் குடியுரிமையை வைத்துப் பாகுபாடு காட்டுவது முறையல்ல என்று விமர்சித்துள்ளனர். இதற்கு முன்னதாகத் தாய்லாந்திலும் சில வணிக நிறுவனங்கள் இஸ்ரேலியப் பயணிகளுக்குச் சேவை வழங்க மறுத்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள், தற்போது அன்றாட வர்த்தகம், சுற்றுலாத் துறையிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, இந்தச் சம்பவம் குறித்துக் கம்போடிய அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதையும் அளிக்கவில்லை. இருப்பினும், இச் சம்பவம் உலகளாவிய ரீதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மத்திய கிழக்கு மோதல் காரணமாகப் பல்வேறு நாடுகளிலும் இஸ்ரேலியப் பிரஜைகளுக்கு எதிரான இத்தகைய புறக்கணிப்புகள் அதிகரித்து வருகின்றன. இது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, சர்வதேச உறவுகளில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்துக் கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset