செய்திகள் வணிகம்
6 ஆண்டுகளுக்கு பிறகு பியோங்யாங்கிற்கு மீண்டும் பறக்கும் ஏர் சீனா
பெய்ஜிங்:
ஆறு ஆண்டுகள் 'இடைவெளிக்கு' பிறகு ஏர் சீனா பெய்ஜிங், வட கொரியாவின் பியோங்யாங்கிற்கு இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கியது.
தலைநகரங்களுக்கிடையே ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு, வட கொரியா படிப்படியாக மேலும் திறந்த நிலையைக் கொண்டுவருவதாக இந்த நடவடிக்கை காட்டுகிறது.
சீனா வட கொரியாவின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான வர்த்தக பங்காளியாகவும் அரசியலில் முக்கிய ஆதாரமாகவும் இருப்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
எனினும், கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் 2020-ல் கடுமையான எல்லை மூடல் செயல்படுத்தப்பட்டதால் இந்தக் கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுக்கிடையே போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது.
ஏர் சீனா இணையதளத்தின்படி, CA121 விமானம் இன்று காலை 8.05 மணிக்கு பெய்ஜிங் தலைநகரின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு பியோங்யாங்கின் சுனான் சர்வதேச விமான நிலையத்தை அடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
பியோங்யாங் சுற்றுலா விசா வழங்க மறுப்பதால், உத்தியோகப்பூர்வ அல்லது சிறப்பு நோக்கமுள்ள பயணிகளுக்கு மட்டுமே எல்லை கடந்த பயணம் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான தினசரி பயணிகள் ரயில் சேவையும் மார்ச் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
