நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பதவி, பட்டம் இல்லை என்றால் சாக மாட்டோம்; சுயமரியாதையே முக்கியம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

போர்ட்டிக்சன்:

பதவி, பட்டம் இல்லை என்றால் நாம் சாக மாட்டோம். சுயமரியாதையே நமக்கு முக்கியம்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன்  இதனை கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டாலும் இன்று ஒருமைப்பாட்டு அரசாங்கம் அமைவதற்கு அக்கூட்டணி முக்கிய காரணமாகும்.
மஇகா ஒரு நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றது.

இருந்தாலும் அரசாங்க ரீதியில் எந்தவொரு பதவியும் பட்டங்களும் கிடைக்கவில்லை.

அதே வேளையில் உரிய அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இருந்தாலும் பதவி, பட்டம் இல்லை என்பதால் மஇகா சாகவில்லை.

சுயமரியாதையுடன் சொந்த காலில் மஇகா இப்போது நிற்கிறது. இது தான் முக்கியம்.

அரசியல் கட்சிகள் யாரையும் நம்பி இருக்கக் கூடாது. சொந்தமாக போராட வேண்டும்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் ஒன்றுக்கூடல் நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்து பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

மஇகாவும் மலேசிய மக்கள் சக்தி கட்சியும் இணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்தது. இதற்கு பலர் குறை சொன்னார்கள்.

சொந்த இனத்திற்கு பிரச்சினை என்றால் பல கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன.

அதன் அடிப்படையில் இந்திய சமுதாயத்தின் நலனுக்காக மஇகாவும் மக்கள் சக்தி கட்சியும் இணைந்து செயல்பட முடிவு செய்தது.

இதில் என்ன தவறு உள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தான் மக்கள் சக்தி கட்சி இக்கூட்டத்தை நடத்தி வருகிறது.

இக்கூட்டம் மிகவும் முக்கியம். குறிப்பாக இந்திய சமுதாயத்தை ஆதரவை பெறுவதற்கு நீங்கள் தான் முக்கியம் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset