செய்திகள் மலேசியா
நிபோங் திபால் தொகுதியில் போட்டியிட்ட போது பல ஏமாற்றங்களை சந்தித்தேன்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
போர்ட்டிக்சன்:
கடந்த பொதுத் தேர்தலில் நிபோங் திபால் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட போது பல ஏமாற்றங்களை சந்தித்தேன்.
ஆனால் அடுத்த தேர்தலை இன்னும் வீரியத்துடன் சந்திக்க மலேசிய மக்கள் சக்தி கட்சி இப்போதே தயார் என்று அதன் தலைவர் டத்தோ ஆர்.எஸ். தனேந்திரன் கூறினார்.
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நிபோங் திபால் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டேன்.
அப்போது இந்தியர்களின் வாக்குகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
மற்றவர்களின் வாக்குகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என வாக்குறுதி வழங்கப்பட்டது.
ஆனால் தேர்தல் பணி தொடங்கிய போது தான் பல ஏமாற்றங்களை நான் சந்தித்தேன்.
மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு அது முதல் தேர்தல். பல ஏமாற்றஙகளுக்கு மத்தியில் நான் தோல்வி கண்டேன்.
ஏமாற்றங்களில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு மலேசிய மக்கள் சக்தி கட்சி தற்போது வலுவாக உள்ளது.
நாளை தேர்தல் என்றாலும் அதை இன்னும் வீரியத்துடன் சந்திக்க மலேசிய மக்கள் சக்தி கட்சி இப்போதே தயார்.
இதன் அடிப்படையில் தாம் அடுத்த இலக்கை நோக்கி ஒன்றாய் வெல்வோம் என்ற தலைப்பில் மக்கள் சக்தி கட்சியின் ஒன்று கூடல் விழா போர்ட்டிக்சனில் மூன்று தினங்களாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தான் எங்கள் கட்சியின் தேர்தல் வீரர்கள் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.
முன்னதாக நெகிரி செம்பிலான் மாநில மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எஸ்.பி. கணபதி சிவலிங்கம் வரவேற்புரையாற்றினார்.
கடந்த ஆண்டு கெடா சுங்கை பட்டாணியில் நடைபெற்ற இந்த நிகழ்வு இந்த ஆண்டு மீண்டும் போர்ட்டிக்சனில் நடைபெற ஆதரவு வழங்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரனுக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்த விழாவுக்கு சிறப்பு வருகை தந்த ம இகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கும் அவர் நன்றியைத் பதிவு செய்து கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2026, 2:21 pm
பதவி, பட்டம் இல்லை என்றால் சாக மாட்டோம்; சுயமரியாதையே முக்கியம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 29, 2026, 12:38 pm
கொழுந்துவிட்டு எரிந்த ஆட்டுக்கொட்டகை: 15 ஆடுகள் தீயில் கருகிப் பலி
March 29, 2026, 12:27 pm
உணவகங்கள் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை: எச்சரிக்கை விடுத்த அரசு
March 29, 2026, 12:25 pm
கெனிங்காவில் துயரம்: மாயமான 10 வயது சிறுவன் எலும்புக்கூடாகக் கண்டெடுப்பு
March 29, 2026, 12:24 pm
கே.எல்.சி.சி-யில் புகைப்படத் தரகர்களின் அட்டகாசம்: 18 நபர்கள் கைது
March 29, 2026, 10:59 am
