நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்களுக்கு அனைவரும் கைகொடுக்க வேண்டும்: டான்ஸ்ரீ சுப்பிரமணியம்

சுங்கைவே:

பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்களுக்கு அனைவரும் கைகொடுக்க வேண்டும்.

முன்னாள் சுகாதார அமைச்சர் டான்ஸ்ரீ சுப்பிரமணியம் இதனை கூறினார்.

சிலாங்கூர் மனிதவள மேம்பாட்டுக் கழகத்தினர் சார்பில் இதுவரை 800 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

அக்கழகத்தின் தலைவர் சுங்கைவே சுகு தனிமனிதனான பல நல்லுள்ளங்களின் ஆதரவுடன் இச்சாதனை படைத்துள்ளார்.

இவ்வேளையில் அவருக்கும் அவரின் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.

 இந்திய சமுதாயத்தை கல்வி மட்டுமே மேம்படுத்தும் என்பதை உறுதியாக கொண்டு சுகு இம்முயற்சியில் இறங்கியுள்ளார்.

இது சாதாரண விஷயம் அல்ல. அவரின் இம்முயற்சி அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ சுப்பிரமணியம் கேட்டு கொண்டார்.

முன்னதாக வசதிக் குறைந்த மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி வரும் சுங்கைவே சுகுவை நான் பாராட்டுகிறேன்.

அவரின் இந்த சேவை தொடர வேண்டும்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு என்ற முறையில் மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறேன்.

இதன் அடிப்படையில் பல திட்டங்களுக்கான நிதியை நான் அதிகரித்துள்ளேன்.

இது நிச்சயம் மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset