செய்திகள் மலேசியா
கபடி காலை வாரிவிடும் விளையாட்டு அல்ல; தற்போது பல்லின மக்களும் விளையாடும் போட்டி: டத்தோஸ்ரீ சரவணன்
கெப்போங்:
கபடி காலை வாரி விடும் விளையாட்டு அல்ல. தற்போது பல்லின மக்களும் விளையாடும் போட்டி.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
ராவணா கபடி கிண்ண போட்டி கெப்போங்கில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இப் போட்டியை நிறைவு செய்து வைத்து பரிசுகளை எடுத்து வழங்கியதில் மகிழ்ச்சி.
மேலும் இப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
பல இக்கட்டான சூழ்நிலையில் தான் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் வரும் காலத்தில் இதுபோன்ற போட்டி இன்னும் எளிமையாகவும் சிக்கல் இல்லாமலும் நடத்தப்பட வேண்டும். இதன் மூலமே அதிகமான விளையாட்டாளர்களை நாம் உருவாக்க முடியும்.
கபடி விளையாட்டில் அதிகமான சாதனையாளர்களை உருவாக்க முடியும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
முன்னதாக ஒரு சிலர் கபடியை காலை வாரிவிடும் விளையாட்டு. இதை ஏன் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
எல்லா இனத்திலும் காலை வாரி விடுபவர்கள் உள்ளனர். ஓட்டு போடும் போது ஒன்றை பேசுபவர்கள் பின் காலை வாரி விடுகின்றனர்.
கபடி காலை வாரி விடும் விளையாட்டு அல்ல. காலை வாரி விடுபவர்களிடம் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது தான் கபடி விளையாட்டு.
ஆக கபடி விளையாட்டை யாரும் தவறான புரிந்து கொள்ள வேண்டாம் என டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.
- பார்த்திபன்நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 10:08 pm
ராவணா கிண்ண கபடி போட்டியில் பிளேக் பெந்தர்ஸ் அணியினர் வாகை சூடினர்
March 28, 2026, 6:21 pm
மஇகா இணைய மறுத்தால் தேசியக் கூட்டணிக்கு பாதிப்பில்லை: தக்கியூடின்
March 28, 2026, 6:20 pm
நூருல் இஸா ராஜினாமா வெறும் வதந்தியே: ஃபஹ்மி
March 28, 2026, 4:21 pm
பேராக்கில் மடானி ராக்யாட் திட்டம் 2026-ஐ கேபிகேடி தலைமை தாங்கும்
March 28, 2026, 3:17 pm
பிஎன்பிஎல் நுகர்வோரை கடனிலிருந்து பாதுகாக்க சிறப்பு சட்டம் தேவை
March 28, 2026, 3:02 pm
எங்கும் சிகரெட் துண்டுகளை எறிவது தீ விபத்துக்களுக்கு ஒரு காரணம்: கிளந்தான் முதலமைச்சர்
March 28, 2026, 2:34 pm
