செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மனிதவள மேம்பாட்டுக் கழகம் சார்பில் 800 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது: சுகு
சுங்கைவே:
சிலாங்கூர் மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் 800 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கப்பட்டுள்ளது.
அக் கழகத்தின் தலைவர் சுங்கைவே சுகு இதனை தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் பிள்ளைகள் கல்வி பயில்வதற்கு மடிக்கணினிகள் அத்தியாவசியமானதாக உள்ளது.
இதன் அடிப்படையாக கொண்டு வசதிக் குறைந்த மாணவர்களும் சொந்தமாக மடிக்கணினிகளை கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கில் இம்முயற்சியை தொடங்கினோம்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இம்மாணவர்களுக்கு கழகத்தின் சார்பில் மடிக்கணினிகள் வழங்கபட்டு வருகிறது.
இது 800 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நாங்கள் வழங்கியுள்ளேன்.
ஒரு கழகத்தின் சார்பில் அதிகமான மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி நாங்கள் சாதித்துள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக நேற்று 82 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
எங்களின் இம்முயற்சி உறுதுணையாக இருக்கும் முன்னாள் சுகாதார அமைச்சர் டான்ஸ்ரீ சுப்பிரமணியம், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு ஆகியோர் இந்நிகழ்வுக்கு தலைமையேற்றனர்.
அதே வேளையில் பல தலைவர்கள், எங்களின் முயற்சிக்கு கைகொடுத்த நல்லுள்ளங்கள் என பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இவர்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமான மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நாங்கள் வழங்குவோம் என்று சுகு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2026, 10:59 am
போலி முதலீட்டுத் திட்டம்: RM300,000 ரிங்கிட்டுக்கும் மேல் இழந்த 61 வயது பெண்மணி
March 29, 2026, 10:44 am
“திரெங்கானுவில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்”: மாநிலக் கல்வித் துறை அறிவித்துள்ளது
March 29, 2026, 10:31 am
பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்களுக்கு அனைவரும் கைகொடுக்க வேண்டும்: டான்ஸ்ரீ சுப்பிரமணியம்
March 29, 2026, 10:28 am
அதிபர் டிரம்பிற்கு எதிராக அமெரிக்காவில் மக்கள் புரட்சி: 80 லட்சம் பேர் பங்கேற்ற 'நோ கிங்ஸ்' பேரணி
March 29, 2026, 9:51 am
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: மலேசியாவின் பல மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை
March 28, 2026, 10:08 pm
