செய்திகள் விளையாட்டு
சீசனின் முடிவில் லிவர்பூல் அணியைவிட்டு முஹம்மது சாலா வெளியேறுகிறார்
லண்டன்:
லிவர்பூல் நட்சத்திர வீரர் முஹம்மது சாலா, ஒன்பது ஆண்டுகளாக அவ்வணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகத் தனது புகழை நிலைநாட்டிய பிறகு, இந்த சீசனின் முடிவில் கிளப்பை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
2025 சீசனின் முடிவில் கையெழுத்திடப்பட்ட இரண்டு ஆண்டு ஒப்பந்த நீட்டிப்பின் இறுதி ஆண்டை நீட்டிக்க வேண்டாம் என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
ரசிகர்களுக்கு மரியாதை, நன்றியைத் தெரிவிக்கும் விதமாக, சாலா இந்த அறிவிப்பை முடிந்தவரை விரைவில் வெளியிட விரும்பினார் என்று லிவர்பூல் கிளப் ஓர் அறிக்கை தெரிவித்தது.
எகிப்தின் ராஜா என்று செல்லப் பெயர் பெற்ற 33 வயதான இவர், 2017-ல் லிவர்பூல் அணியில் இணைந்தார்.
மேலும், 435 போட்டிகளில் 255 கோல்களை அடித்துள்ளார்.
இது கிளப்பின் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச கோல் எண்ணிக்கையாகும்.
பிரிமியர் லீக்கில், அவர் 310 போட்டிகளில் 281 கோல்களை (189 கோல்கள், 92 உதவிகள்) அடித்துள்ளார். இது அந்த லீக்கின் வரலாற்றிலேயே அதிகபட்சமாகும்.
அவரது 191 பிரிமியர் லீக் வாழ்நாள் கோல்கள், அவரை எல்லா காலத்திலும் நான்காவது இடத்தில் வைக்கிறது.
இந்த கிளப், இந்த நகரம், அதன் ரசிகர்கள் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இவ்வளவு தூரம் மாறுவார்கள் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை.
லிவர்பூல் என்பது ஒரு கால்பந்து கிளப்பை விட மேலானது.
அது ஒரு உணர்வு, ஒரு வரலாறு மற்றும் ஒரு ஆன்மா; அதை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் என்று சாலா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 9:26 am
அந்தோனியோ கிரிஸ்மேன் அட்லாட்டிகோவை விட்டு வெளியேறுகிறார்
March 24, 2026, 8:59 am
பிரான்ஸ் தலைமைப் பயிற்சியாளராகும் ஜினடின் ஜிடான் தருவாயில் உள்ளார்
March 24, 2026, 8:56 am
லெமானே யமாலுக்கு குறிவைக்கும் பிஎஸ்ஜி அணி: 1.8 பில்லியன் ரிங்கிட்டை வழங்கத் தயார்
March 23, 2026, 11:31 am
சரிவைச் சந்திக்கும் ஹரிமாவ் மலாயா: தரவரிசையில் பின்னடைவு
March 23, 2026, 10:40 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
March 23, 2026, 10:07 am
முக்கிய தருணத்தில் நிகழ்ந்த தவறு: ஆர்செனலின் கோப்பை கனவு தகர்ந்தது
March 22, 2026, 9:17 am
பிரான்ஸ் லீக் 1: கிண்ணம் பிஎஸ்ஜி அணி வெற்றி
March 22, 2026, 9:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி
March 21, 2026, 8:33 am
