நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நூருல் இஸா ராஜினாமா வெறும் வதந்தியே: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

கெஅடிலான்  துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இஸ்ஸா அன்வர் ராஜினாமா செய்துவிட்டார் என்ற கூற்று போலிச் செய்தி ஆகும்.

கெஅடிலான்  தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

இதுவொரு போலிச் செய்தி என்று அவர் சுருக்கமாகக் கூறினார்.

முன்னாள் பெர்மாதாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுவது குறித்த யூகங்கள் இன்று அதிகாலையில் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.

கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் மகளான நூருல் இஸா,

கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் 2025-2028 ஆம் ஆண்டுக்கான கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கெஅடிலான் தேர்தலில் இஸா, பதவியில் இருந்த டத்தோஸ்ரீ முகமது ரபிஸி ரம்லியை நேருக்கு நேர் போட்டியில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset