செய்திகள் மலேசியா
பிஎன்பிஎல் நுகர்வோரை கடனிலிருந்து பாதுகாக்க சிறப்பு சட்டம் தேவை
கோலாலம்பூர்:
இப்போது வாங்கி பிறகு செலுத்தும் (Buy Now Pay Later — BNPL) திட்டங்களுக்கு சிறப்பு சட்டம் இயற்றுவது, குறிப்பாக இளைய தலைமுறையினரை அதிக கடன் சுமையிலிருந்து பாதுகாக்க மிகவும் அவசியமாகும்.
நுகர்வோர் தேவைகளுக்கும் வணிகர் நலன்களுக்கும் இடையே சமநிலையை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை முக்கியமானது என்று குளோபல் லா திங்கர் சொசைட்டி மலேசியாவின் தலைவர் முஹம்மத் நஸ்ரின் ஃபைஸ் கூறியுள்ளார்.
பொருத்தமான சட்ட கட்டமைப்பு இன்னும் தீர்மானிக்கப்படாததால், தற்போதுள்ள சட்டங்கள் பிஎன்பிஎல்-க்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுவதாக அவர் விளக்கினார்.
"நுகர்வோருக்கு தங்களின் கொள்முதல் வரம்புகள் தெரியும்படி தெளிவான தளம் தேவை" என்று அவர் பெர்னாமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான டாரா முடாவில் கூறினார்.
விற்பனையாளர்களுக்கும் தாங்கள் வசூலிக்க வேண்டிய செலவுகள் அல்லது வட்டி விகிதங்கள் குறித்த தெளிவு தேவை என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
இந்தச் சட்டம் இயற்றப்படுவது இரண்டு தரப்பினருக்கும் பயனளிக்கும். குறிப்பாக, வணிகர்கள் லாபம் ஈட்டவும் நுகர்வோர் அதிகப்படியான நிதி அபாயத்தை எதிர்கொள்ளாமல் செலவிடவும் வழிவகுக்கும்.
நுகர்வோருக்கான நிதிக் கல்வியறிவு இயக்கங்களை அரசு சாரா இயக்கங்கள் போன்ற பங்குதாரர்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் முஹம்மத் நஸ்ரின் பரிந்துரைத்தார்.
திட்ட முடிவுகளை சட்ட வரைவில் ஒருங்கிணைப்பது வணிகர்கள், நுகர்வோர் இருவரையும் திறம்பட பாதுகாக்கும்.
இந்தச் சமநிலையான அணுகுமுறை நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.
"அதிகப்படியான கடன் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று அவர் வலியுறுத்தினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 6:21 pm
மஇகா இணைய மறுத்தால் தேசியக் கூட்டணிக்கு பாதிப்பில்லை: தக்கியூடின்
March 28, 2026, 6:20 pm
நூருல் இஸா ராஜினாமா வெறும் வதந்தியே: ஃபஹ்மி
March 28, 2026, 4:21 pm
பேராக்கில் மடானி ராக்யாட் திட்டம் 2026-ஐ கேபிகேடி தலைமை தாங்கும்
March 28, 2026, 3:02 pm
எங்கும் சிகரெட் துண்டுகளை எறிவது தீ விபத்துக்களுக்கு ஒரு காரணம்: கிளந்தான் முதலமைச்சர்
March 28, 2026, 2:34 pm
மனிதவள அமைச்சராக 100 நாட்கள்; நீண்ட கால தீர்வுகளில் கவனம் செலுத்தப்படுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
March 28, 2026, 2:32 pm
