செய்திகள் மலேசியா
மஇகா இணைய மறுத்தால் தேசியக் கூட்டணிக்கு பாதிப்பில்லை: தக்கியூடின்
கோலாலம்பூர்:
மஇகா இணைய மறுத்தால் தேசியக் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
தேசியக் கூட்டணி தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் இதனை கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பரில் தேசியக் முன்னணி கட்சியான மஇகா தேசியக் கூட்டணியில் அதிகாரப்பூர்வ இணைய விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தது.
இருந்த போதிலும் மஇகா கூட்டணியில் சேர மறுத்தால் தேசியக் கூட்டணி பாதிக்கப்படாது.
எதிர்க்கட்சியுடன் இணையும் திட்டத்தைத் தொடர்வதா அல்லது தற்போதைய நிலையில் நீடிப்பதா என்பது குறித்து மஇகா எடுக்கும் நிலைப்பாட்டிற்குத் தனது கட்சி திறந்த மனதுடன் உள்ளது.
உண்மையில் மஇகா எங்களுடன் இணைந்தாலும் சரி, இணையாவிட்டாலும் சரி, தேசியக் கூட்டணி தனக்கே உரிய பலம் இருக்கும்.
கடந்த பொதுத் தேர்தலில் மஇகா இல்லாமலேயே தேசியக் கூட்டணியால் 74 நாடாளுமன்ற இடங்கள் வரை வெல்ல முடிந்தது.
மஇகாவுக்கு ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இருக்கிறார்.
எனவே அது தேசியக் கூட்டணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 6:20 pm
நூருல் இஸா ராஜினாமா வெறும் வதந்தியே: ஃபஹ்மி
March 28, 2026, 4:21 pm
பேராக்கில் மடானி ராக்யாட் திட்டம் 2026-ஐ கேபிகேடி தலைமை தாங்கும்
March 28, 2026, 3:17 pm
பிஎன்பிஎல் நுகர்வோரை கடனிலிருந்து பாதுகாக்க சிறப்பு சட்டம் தேவை
March 28, 2026, 3:02 pm
எங்கும் சிகரெட் துண்டுகளை எறிவது தீ விபத்துக்களுக்கு ஒரு காரணம்: கிளந்தான் முதலமைச்சர்
March 28, 2026, 2:34 pm
மனிதவள அமைச்சராக 100 நாட்கள்; நீண்ட கால தீர்வுகளில் கவனம் செலுத்தப்படுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
March 28, 2026, 2:32 pm
