செய்திகள் மலேசியா
டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசானின் திறந்த இல்ல உபசரிப்பு; மலேசியர்களின் பல்லின கலாச்சாரத்தை பிரதிபலித்தது: டத்தோஸ்ரீ தனேந்திரன்
ரந்தாவ்:
டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசானின் திறந்த இல்ல உபசரிப்பு மலேசியர்களின் பல்லின கலாச்சாரத்தை பிரதிபலித்தது.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை கூறினார்.
வெளியுறவு அமைச்சரும், தேசிய முன்னணி துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ உத்தாமா ஹாஜி முஹம்மது ஹசானின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டேன்.
பல்லின சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதால் இந்த விழா மிகவும் களைகட்டியது.
அங்கு நிலவிய நட்பான சூழல், பல்லின மலேசிய, பழக்கவழக்கங்கள், கலாச்சாரத்தின் அழகைத் தெளிவாகப் பிரதிபலித்தது.
பல்வேறு வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு பரிமாறப்பட்டது.
மேலும் உள்ளூர் சமூகத்தை நல்லிணக்கம் நிறைந்த சூழலில் வெற்றிகரமாக ஒன்றிணைத்த இந்தத் திறந்த இல்ல உச்சரிப்பு பாராட்டுக்கிறது.
நெகிரி செம்பிலான் தலைவர் எஸ். கணவதி, துணைத் தலைவர் கௌதமன், பொருளாளர் ராம்லால், செயலாளர் சரவணன் நாயுடு உட்பட பலர் என்னுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தேசத்தின் நலனுக்காக இந்த ஒற்றுமை, நல்லிணக்க உணர்வு தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 3:02 pm
எங்கும் சிகரெட் துண்டுகளை எறிவது தீ விபத்துக்களுக்கு ஒரு காரணம்: கிளந்தான் முதலமைச்சர்
March 28, 2026, 2:34 pm
மனிதவள அமைச்சராக 100 நாட்கள்; நீண்ட கால தீர்வுகளில் கவனம் செலுத்தப்படுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
March 28, 2026, 2:32 pm
மலேசிய இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் NRTIA மலேசிய நிர்வாகிகள் சந்திப்பு
March 28, 2026, 2:31 pm
உள்நாட்டு கலைஞர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமையும் ஆதரவும் வழங்க வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 28, 2026, 2:30 pm
புந்தோங் இந்து மயானத்தில் மேலும் இரண்டு மின் தகன அடுப்புகள் நிர்மாணிக்கப்பட்டது: டத்தோ சிவநேசன்
March 28, 2026, 12:44 pm
'என்ஜின், குளிரூட்டி ஓடும் நிலையில் காரில் தூங்குவது மரணத்தை விளைவிக்கலாம்': சித்தி சஹாரா
March 28, 2026, 12:16 pm
