செய்திகள் மலேசியா
தமிழ்க் கல்வி விருதளிப்பு விழா; மலேசியாவில் தமிழ்க்கல்வி, தமிழ்மொழிக்காக சேவையாற்றி வருபவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்: டத்தோ இராஜேந்திரன்
கோலாலம்பூர்:
தமிழ்க் கல்வி விருதளிப்பு விழாவில் மலேசியாவில் தமிழ்க்கல்வி, தமிழ்மொழிக்காக சேவையாற்றி வருபவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்
தகமை எனப்படும் தமிழ்க் கல்வி ஆளுமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ என் எச்எஸ் இராஜேந்திரன் கூறினார்.
இந்த விருது விழா வரும் செப்டம்பர் 20ஆம் தேதி ஷாஆலம் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மலேசியாவில் தமிழ்க்கல்வி, தமிழ்மொழிக்காக பணியாற்றி, தொடர்ந்து பணியாற்றி வரும் சிறந்த நபர்கள், நிறுவனங்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பது இவ்விழாவின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக மலேசியா முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வருகிறது.
தமிழ்ப்பள்ளிகளின் தரத்திலும் நம்பிக்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,
இந்நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த போராடுபவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் 7 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
சிறந்த தலைமையாசிரியர் விருது, சிறந்த தமிழ்மொழி ஆசிரியர் விருது, சிறந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர் விருது, சிறந்த தமிழ்ப்பள்ளி தமிழ் ஆசிரியர் விருது, சிறந்த கல்லூரி, பல்கலைக்கழக விரிவுரையாளர் விருது, தமிழ் சேவைக்கான சிறந்த விருது தனிநபர் அல்லது நிறுவனம், வாழ்நாள் சாதனையாளர் விருது என்ற பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இந்த விருதை வெல்பவர்களுக்கு ரொக்கப் பணம், பதக்கம், சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்படும்.
இந்த உயரிய முயற்சிக்கு மக்கள் ஆதரவு தரலாம். அதே வேளையில் சிறந்த சேவையாளர்களையும் முன்மொழியலாம் என்று அவர் கூறினார்.
இவ்விருது விழா குறித்த மேல்விவரங்களுக்கு சிம திரவியம் 0196534808, இரா சிவக்குமார் 0196970773 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 4:21 pm
பேராக்கில் மடானி ராக்யாட் திட்டம் 2026-ஐ கேபிகேடி தலைமை தாங்கும்
March 28, 2026, 3:17 pm
பிஎன்பிஎல் நுகர்வோரை கடனிலிருந்து பாதுகாக்க சிறப்பு சட்டம் தேவை
March 28, 2026, 3:02 pm
எங்கும் சிகரெட் துண்டுகளை எறிவது தீ விபத்துக்களுக்கு ஒரு காரணம்: கிளந்தான் முதலமைச்சர்
March 28, 2026, 2:34 pm
மனிதவள அமைச்சராக 100 நாட்கள்; நீண்ட கால தீர்வுகளில் கவனம் செலுத்தப்படுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
March 28, 2026, 2:32 pm
மலேசிய இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் NRTIA மலேசிய நிர்வாகிகள் சந்திப்பு
March 28, 2026, 2:31 pm
உள்நாட்டு கலைஞர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமையும் ஆதரவும் வழங்க வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 28, 2026, 2:30 pm
