நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் NRTIA மலேசிய நிர்வாகிகள் சந்திப்பு

கோலாலம்பூர்:

வெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர்கள்  சங்கத்தின் மலேசியா  நிர்வாகிகள் மலேசியாவிற்கான இந்தியத் தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் NRTIA மலேசியா தலைவர் பிர்தௌஸ் கான், செயலாளர் ஜான் ரீகன், இணைச் செயலாளர் வசந்த் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட புதிய துணை உயர் ஆணையர் ஹிதேஷ் ராஜ்பால், முதன்மை செயலாளர் ராஜேஷ் மணியில் ஆகியோரைச் சந்தித்து நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:

▪ தொழிலாளர் நலன்: மலேசியாவில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

▪ கடப்பிதழ் சேவைகள்: என்.ஆர்.ஐவுகளின் கடப்பித்ழ் புதுப்பித்தல் தொடர்பான நடைமுறைகள், அதில் உள்ள சவால்கள் குறித்து பேசப்பட்டது.

▪ அவசரகால உதவி: எதிர்பாராத அவசரச் சூழல்களில் இந்தியர்களுக்குத் தேவையான உடனடித் தூதரக உதவிகள், ஆதரவு குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இச்சந்திப்பின் போது, தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் குறித்தும், அதன் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் தூதரக அதிகாரிகளிடம் தலைவர் திரு. பிர்தௌஸ் கான் விளக்கினார்.

குறிப்பாக:

1. தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரியத்தின் அடையாள அட்டை திட்டம்.

2. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள்.

இந்தத் திட்டங்கள் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்வது குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தியத் தூதரக அதிகாரிகள் இந்தப் பயனுள்ள முன்னெடுப்புகளுக்குத் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset