நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல 7 மலேசிய டேங்கர் கப்பல்கள் பச்சை விளக்குக்காக காத்திருக்கின்றன: முஹம்மத் ஹசான்

புத்ராஜெயா:

ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல7 மலேசிய டேங்கர் கப்பல்கள் பச்சை விளக்குக்காக காத்திருக்கின்றன.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

மத்திய கிழக்கு போரைத் தொடர்ந்து தற்போது ஈரான் முற்றுகையிட்டுள்ள ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல, ஏழு மலேசிய எண்ணெய்க் கப்பல்கள் ஈரான் இராணுவத்திடமிருந்து பச்சைக்கொடிக்காக காத்திருக்கின்றன.

அந்த எண்ணெய்க் கப்பல்களில் மூன்று பெட்ரோனாஸ் நிறுவனத்திற்கும், இரண்டு எம்ஐஎஸ்சி நிறுவனத்திற்கும், ஒன்று சபுரா நிறுவனத்திற்கும், மற்றொன்று செபாடு நிறுவனத்திற்கும் சொந்தமானவை.

போர்க்காலத்தில் தகவல் தொடர்பு பொதுவாகக் கடினமாக இருப்பதால், தெஹ்ரானிலிருந்து வரும் அறிவுறுத்தல்கள் சில சமயங்களில் (ஹோர்முஸ் ஜலசந்தியை) சென்றடைவதில்லை.

தனது நாடாளுமன்றத் தொகுதியான ரெம்பாவில் நடைபெற்ற பெருநாள் பொதுக்கூட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset