செய்திகள் மலேசியா
இந்தோனேசியா, ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு பாதிப்பில்லை: மெட் மலேசியா
கோலாலம்பூர்:
இந்தோனேசியாவின் மேற்கு பப்புவாவில் 5.8 மாக்னிட்யூட் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மலேசியா கடல் பரப்பில் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று மலேசியா வானிலை மையம் (மெட் மலேசியா) உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று காலையில் மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், இந்த நடுத்தர அளவிலான நிலநடுக்கம் இன்று காலை 6.51 மணிக்கு நடந்தது என்றும் இதனால் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கம் 3.4 டிகிரி தெற்கு, 139.4 டிகிரி கிழக்கு ஆயத்தொலைவில் 56 கிலோமீட்டர் (கி.மீ.) ஆழத்தில் மையப்பட்டதாக மெட் மலேசியா தெரிவித்தது.
இதற்கு முன்னதாக, நேற்று இரவு ஜப்பானின் ஹான்ஷுவின் கிழக்கு கடலோரத்திற்கு வெளியே 6.4 மாக்னிட்யூட் கொண்ட வலுவான நிலநடுக்கமும் நடந்ததாக மெட் மலேசியா அறிவித்தது.
இரவு 10.18 மணிக்கு நடந்த நிலநடுக்கம் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. அது 3.95 டிகிரி வடக்கு, 143.5 டிகிரி கிழக்கு ஆயத்தொலைவில் 63 கிலோமீட்டர் (கி.மீ.) ஆழத்தில் மையப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 6:01 pm
லாரியில் பற்றிய தீ: கருகிய பிஞ்சு உயிர்
March 27, 2026, 5:43 pm
நலிந்த நிலையில் தேசிய தங்க பதக்க நாயகன்
March 27, 2026, 5:33 pm
3 கிலோ போதைப்பொருள் கடத்தல் வழக்கு: கைதான நபருக்கு மரண தண்டனை எச்சரிக்கை
March 27, 2026, 5:32 pm
8 பெண்களைக் கடத்திய வழக்கில் இருவர் மீது வழக்குப்பதிவு: தவாவ் நீதிமன்றத்தில் விசாரணை
March 27, 2026, 5:30 pm
வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டினால் பள்ளிகள் மூடப்படலாம்: கல்வி துணையமைச்சர்
March 27, 2026, 5:27 pm
இந்த சியாவால் கண்ணீரோடு கழிகிறது: தீயால் பாதிக்கப்பட்டோரின் அவல நிலை
March 27, 2026, 5:00 pm
யான் மிதக்கும் பள்ளிவாசல் அடுத்த மாதம் திறக்கப்படும்
March 27, 2026, 4:44 pm
வறண்ட நீர்வீழ்ச்சிகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் வியாபாரிகள்
March 27, 2026, 4:40 pm
