செய்திகள் மலேசியா
நலிந்த நிலையில் தேசிய தங்க பதக்க நாயகன்
புக்கிட் மெர்தாஜாம்:
1998 காமன்வெல்த் விளையாட்டுப் பந்தயத்தில் நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் நடைபோட்டி வீரர் ஜி. சரவணனின் நிலை கல்வி, திறன் மேம்பாட்டு அறக்கட்டளையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சரவணன் (56), சில ஆண்டுகளாக மூளை, முதுகுத் தண்டில் உள்ள மோட்டார் நரம்பு செல்களைப் பாதிக்கும் 'மோட்டார் நியூரான் நோய்' (MND)-ஆல் அவதிப்படுகிறார்.
அறக்கட்டளையின் தலைவர் டத்தோ நூருல் அரிஃப்பின் அப்துல் மஜீட், சிகிச்சை, மருந்து செலவுகளிலிருந்து குடும்பத்தின் சுமையைக் குறைக்க உதவும் நிதியை திரட்ட முயற்சிக்கிறோம் என்று கூறினார்.
"நோய் உறுதிப்பட்டது முதல் சரவணனின் நிலையைக் கவனிக்கிறோம், குடும்பத்தின் சுமையைக் குறைக்க முடிந்தவரை முயற்சிக்கிறோம்.
"முன்பு சரவணனின் நிலை நன்றாக இருந்தது, ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரலில் சந்தித்த பின்னர் இன்று வரை நிலை மோசமடைந்துள்ளது, இப்போது படுக்கையில் பேச முடியாத நிலையில் உள்ளார்.
"அவரால் குழாய் மூலம் மட்டுமே உணவு உட்கொள்ள முடிகிறது, எப்போதும் சுவாச கருவியைச் சார்ந்திருக்கிறார். இரண்டு நிமிடங்கள் இதயம் நின்று பின்னர் மீட்கப்பட்டுள்ளது" என்று இன்று இங்கு தொடர்புகொண்ட போது அவர் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை புக்கிட் மெர்தாஜாமில் உள்ள அந்த முன்னாள் வீரர் வீட்டில் அவரது குடும்பத்திற்கு, கடந்த ஆண்டு நிதியம் தொடங்கப்பட்டதிலிருந்து தனிநபர்கள், பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட RM1,00,000 நன்கொடையை அறக்கட்டளை வழங்கியதாக அவர் தெளிவுபடுத்தினார்.
"நிச்சயமாக அதிக செலவை உள்ளடக்கும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு இது பயன்படுத்தப்படும் என்று நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.
இதற்கு முன்பு, சரவணனின் நிலை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் கவனத்திற்கும் சென்றது. அவர் உதவி வழங்கியதுடன் முன்னாள் வீரர் குணமடைய பிரார்த்திக்கவும் செய்தார்.
1998 காமன்வெல்த் விளையாட்டுப் பந்தயத்தில் 50 கிலோமீட்டர் நடை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த அந்த முன்னாள் வீரர் இன்று வரை மலேசிய மக்களால் மறக்க முடியாத இடத்தில் உள்ளார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 6:01 pm
லாரியில் பற்றிய தீ: கருகிய பிஞ்சு உயிர்
March 27, 2026, 5:33 pm
3 கிலோ போதைப்பொருள் கடத்தல் வழக்கு: கைதான நபருக்கு மரண தண்டனை எச்சரிக்கை
March 27, 2026, 5:32 pm
8 பெண்களைக் கடத்திய வழக்கில் இருவர் மீது வழக்குப்பதிவு: தவாவ் நீதிமன்றத்தில் விசாரணை
March 27, 2026, 5:30 pm
வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டினால் பள்ளிகள் மூடப்படலாம்: கல்வி துணையமைச்சர்
March 27, 2026, 5:27 pm
இந்த சியாவால் கண்ணீரோடு கழிகிறது: தீயால் பாதிக்கப்பட்டோரின் அவல நிலை
March 27, 2026, 5:00 pm
யான் மிதக்கும் பள்ளிவாசல் அடுத்த மாதம் திறக்கப்படும்
March 27, 2026, 4:44 pm
வறண்ட நீர்வீழ்ச்சிகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் வியாபாரிகள்
March 27, 2026, 4:40 pm
