நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யான் மிதக்கும் பள்ளிவாசல் அடுத்த மாதம் திறக்கப்படும்

யான்: 

அடுத்த மாதம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் புதிய மிதக்கும் பள்ளி, மாவட்டத்திற்கு ஒரு முக்கிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்போங் ருவாட்டில் நடைபெறும் இந்தத் திட்டத்தில் மொத்த கட்டுமான செலவு RM12.95 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக துணை பணிகள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்ம்மத் மஸ்லான் தெரிவித்தார்.

இந்த திட்டம் ஜூலை 2023-ல் புதிய ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொது பணித்துறை (JKR) திட்டத்தைச் செயல்படுத்தும் முகவர் அமைப்பாக நியமிக்கப்பட்டது.

"இந்த மசூதியின் கட்டுமானம் உள்ளூர் சமூகத்திற்கு பாதுகாப்பான, வசதியான வழிபாட்டு வசதிகளை வழங்கும் அரசாங்கத்தின் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்" என்று திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த பின்னர் அஹ்ம்மத் மஸ்லான் கூறினார். மசூதி மாநிலத்திற்கு புதிய சுற்றுலா ஈர்ப்பாக மாறும் திறனையும் கொண்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 மசூதி கட்டிடத்தின் முக்கிய பணிகளில் வளைவு, நீர் தொட்டி கோபுரம், அஸான் கோபுரம், சிறிய தேசிய மின்சார நிறுவன (TNB) துணை நிலையம், சிறிய கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு (SSTS) ஆகியவை அடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பொது பணித்துறையிடமிருந்து கெடா இஸ்லாமிய மத குழுவிற்கு (MAIK) திட்டத்தை ஒப்படைப்பது அடுத்த மாதம் இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு பள்ளிவாசல் பொதுமக்களுக்கு முழுமையாக திறக்கப்படும்.

"கட்டி முடிந்தவுடன் மிதக்கும் மசூதி வழிபாட்டு இல்லமாக மட்டும் இல்லாமல், யான் மாவட்டத்தில் வளர்ச்சிக்கும் சமூக நலத்திற்கும் அடையாளமாக விளங்கும் என்று  அமைச்சகம் நம்புகிறது" என்று அஹ்ம்மத் மஸ்லான் மேலும் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset