நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த சியாவால் கண்ணீரோடு கழிகிறது: தீயால் பாதிக்கப்பட்டோரின் அவல நிலை 

 பாத்து ஃபெரிங்கி: 

இங்குள்ள கம்போங் டின் மாம்போவில் வசிக்கும் ஒரு முதியவர், தன் வீட்டில் தீ பற்றி எரியும் போது புற்றுநோயால் அவதிப்படும் தன் மனைவியைக் காப்பாற்றியுள்ளார்.

குடியிருப்பாளர் சுல்கிஃப்லி அப்துல்லாஹ்@பாலகிருஷ்ணன் (70) என்பவர், தீயில் 11 வீடுகள் அழிந்தன என்றும், சம்பவத்தின் போது தன் மனைவி ஃபரிடா ஹாஷிம் (69)-க்கு மருந்து கொடுத்து முடித்திருந்ததாகக் கூறினார்.

"வீட்டின் பின்புறத்தில் தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்தவுடன் மனைவியை அங்கிருந்து வழிநடத்தி வெளியே அழைத்துவந்தேன்.

"மனதில் வேறு எதுவும் தோன்றவில்லை, மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். உடையுடன் மட்டுமே வெளியே வந்தோம், முக்கியமான ஆவணங்களையும் கைபேசியையும் எடுக்க நேரமில்லாமல் போனது" என்று இன்று அந்த இடத்தில் சந்தித்த போது அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, மற்றொரு குடியிருப்பாளர் ரோஸ்மாவதி ஜுல் (46), சம்பவத்தின் போது தான் மூன்று குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்ததாகவும், மற்றொரு பிள்ளை வேலைக்கு புறப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.

"வெடிப்பு சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்தேன், பிறகு அண்டை வீடு எரிவதைப் பார்த்தேன்.

"எதையும் காப்பாற்ற முடியவில்லை, ஆனால் உயிர் பிழைத்தோம் என்பதற்கு நன்றி சொல்கிறேன். எங்கே தங்குவது என்று இன்னும் யோசிக்கவில்லை. இந்த சியாவால் மிகவும் வேதனையாக உள்ளது, ஆனால் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, பினாங்கு தேசிய தீயணைப்பு, மீட்பு துரையின் (JBPM) மண்டலம் 1 தலைவர் ஜமீல் அப்துல்லா, ஒரு கார் மட்டும் கடந்துசெல்லக்கூடிய குறுகிய வழிகள் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் நுழைவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறினார்.

இதன் காரணமாக தீயணைப்பு வாகனங்களும் நீர் டேங்கர் லாரிகளும் பிரதான சாலையோரத்தில் நிறுத்த வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

"தீ நிகழ்விடத்திற்கு சுமார் 700 அடி (200 மீட்டருக்கும் அதிகம்) தண்ணீர் பாய்ச்ச அருகிலுள்ள தீயணைப்பு குழாயைப் பயன்படுத்தினோம்.

"மேலும், அருகிலுள்ள வலுவான காற்றால் தீ விரைவாக பரவியது, ஆனால் மீட்பு குழுவினர் இதை கட்டுப்படுத்தினர்.

"இங்கு மொத்தம் சுமார் 100 வீடுகள் உள்ளன, அதில் 11 வீடுகள் தீயில் சிக்கின. தீயின் காரணம், சேதத்தின் மொத்த மதிப்பு இன்னும் விசாரணையில் உள்ளது" என்று அந்த இடத்தில் சந்தித்த போது அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset