செய்திகள் மலேசியா
லாரியில் பற்றிய தீ: கருகிய பிஞ்சு உயிர்
ஜொகூர் பாரு:
இன்று இங்கு பாசிர் குடாங்கின் சாஹாயா பாரு, இஸ்கண்டார் ஹலால் பார்க் அருகே சரக்கற்ற லாரியின் தீ விபத்தில் ஒரு ஆண் குழந்தை உயிரிழந்தது.
இச்சம்பவத்தில் , நான்கு வயது குழந்தையின் தந்தையும் லாரி ஓட்டுனருமான ஆடவர் லாரியிலிருந்து வெளியேறி உயிர் தப்பினார்.
பாசிர் குடாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் மூத்த நடவடிக்கை கட்டளை அதிகாரி துணை தீயணைப்புத் தலைவர் ஈ (TPgB II) ஃபிர்தாஸ் அஹ்ம்மத், காலை 10.46 மணிக்கு தமது தரப்பு அவசர அழைப்பு பெற்றதை தொடர்ந்து ஆறு அதிகாரிகளை அந்த இடத்திற்கு அனுப்பியதாக கூறினார்.
"நடவடிக்கை குழு (PKO) நிகழ்விடத்தை அடைந்தபோது, சரக்கற்ற லாரியின் முன்பகுதியில் சுமார் 60 சதவீதம் தீ பற்றியிருப்பது கண்டறியப்பட்டது.
"ஆறு வகை உலர் தூள் தீயணைப்பு கருவிகள், ஒரு கொத்தளி மண் கொண்டு வரப்பட்டு பொதுமக்களால் தீயணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சம்பவத்தின் போது ஒரு குழந்தை லாரியில் இருந்தது. ஓட்டுனர் தப்பித்துவிட்டார் என்று இன்றைய ஊடக அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
மதியம் 1.30 மணிக்கு நடவடிக்கை முடிவடைவதற்கு முன்பு தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 5:43 pm
நலிந்த நிலையில் தேசிய தங்க பதக்க நாயகன்
March 27, 2026, 5:33 pm
3 கிலோ போதைப்பொருள் கடத்தல் வழக்கு: கைதான நபருக்கு மரண தண்டனை எச்சரிக்கை
March 27, 2026, 5:32 pm
8 பெண்களைக் கடத்திய வழக்கில் இருவர் மீது வழக்குப்பதிவு: தவாவ் நீதிமன்றத்தில் விசாரணை
March 27, 2026, 5:30 pm
வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டினால் பள்ளிகள் மூடப்படலாம்: கல்வி துணையமைச்சர்
March 27, 2026, 5:27 pm
இந்த சியாவால் கண்ணீரோடு கழிகிறது: தீயால் பாதிக்கப்பட்டோரின் அவல நிலை
March 27, 2026, 5:00 pm
யான் மிதக்கும் பள்ளிவாசல் அடுத்த மாதம் திறக்கப்படும்
March 27, 2026, 4:44 pm
வறண்ட நீர்வீழ்ச்சிகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் வியாபாரிகள்
March 27, 2026, 4:40 pm
