நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகப் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க, இலகுவான பணி முறையை தனியார் நிறுவனங்கள் அமல்படுத்த வேண்டும்: மனிதவள அமைச்சு

புத்ராஜெயா:

எரிசக்தி நெருக்கடி, உலகப் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க, இலகுவான பணி ல் முறையை தனியார் நிறுவனங்கள் அமல்படுத்த வேண்டும்.

மனிதவள அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பரிந்துரைகளுக்கு இணங்க, உலக எரிசக்தி நெருக்கடி, உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக, வீட்டிலிருந்து வேலை செய்தல் உள்ளிட்ட இலகுவான பணி முறையை தனியார் துறை இந்நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இலகுவான பணி ஏற்பாடுகளை செயல்படுத்துவது, உற்பத்தித்திறனைப் பாதிக்காமல் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மிகவும் திறமையாகச் சரிசெய்ய உதவும்.

மேலும் வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துதல், வேலை, வாழ்க்கைச் சமநிலை ஆகியவற்றின் அடிப்படையில் முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்மைகளை வழங்கும்.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எரிசக்தி செலவுகள் அதிகரித்து வருவதாலும், தொழிலாளர்களின் அன்றாட நடமாட்டத்தைச் சார்ந்திருப்பதாலும், நிறுவனத்தின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைகள், நெகிழ்வான வேலை நேரம், பணி சுழற்சி, கலப்பு மாதிரிகள் உள்ளிட்ட நெகிழ்வான வேலை அணுகுமுறைகள் பொருத்தமானவையாகக் கருதப்படுகின்றன.

பணியாளர்கள் தங்களது முதலாளிகளிடமிருந்து நெகிழ்வான வேலை ஏற்பாடுகளைக் கோருவதற்கு அனுமதிக்கும், 1955 ஆம் ஆண்டு வேலைவாய்ப்புச் சட்டத்தின் [சட்டம் 265] 60பி, 60கியூ பிரிவுகள் மூலம் 1 ஜனவரி 2023 அன்று நடைமுறைக்கு வந்த திருத்தத்திற்கு இணங்கவே இது செயல்படுத்தப்படுகிறது.

இந்த விதிகளின் கீழ், பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது உட்பட, வேலை நேரம், நாட்கள் அல்லது வேலை செய்யும் இடம் ஆகியவற்றில் நெகிழ்வுத்தன்மைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மனிதவள அமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset