செய்திகள் மலேசியா
ஈரான் மோதலின் தாக்கங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு மக்களவை கூட்டத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை
கோலாலம்பூர்:
தற்போதைய நிகழ்வுகள் குறித்த மக்களின் கவலைகளைத் தொடர்ந்து, ஈரான் போரினால் மலேசியா, உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க மக்களவை சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்.
எதிர்க்கட்சிக் கூட்டணி அரசாங்கத்தை இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
மக்களவையின் நிலையான விதிமுறைகளின் பிரிவு 11(3)-க்கு இணங்க, இத்தகைய பரிசீலனையைக் கோரி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.
நேற்று பிரதமர் வெளியிட்ட அறிவிப்பிற்குப் பிறகு, மேலும் விரிவான விளக்கம் கோரி மக்களிடமிருந்து எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு கேள்விகளும் எதிர்வினைகளும் வந்தன.
எழுப்பப்பட்ட விடயங்கள் ஆக்கப்பூர்வமாகவும், இருதரப்பு ரீதியாகவும், வெளிப்படையாகவும் விவாதிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, மக்களின் நலன்களையும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து பிரதமருக்கு அனுப்பப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தையும் அவர் பதிவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 3:52 pm
மொண்ட் கியாரா கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர்
March 27, 2026, 3:49 pm
இந்தோனேசியா, ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு பாதிப்பில்லை: மெட் மலேசியா
March 27, 2026, 12:58 pm
மாற்றுத்திறனாளிப் பெண்ணைச் சீரழித்த எச்.ஐ.வி நோயாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடித் தீர்ப்பு
March 27, 2026, 12:56 pm
எல்லை மீறிய விபரீதம்: மயானத்தில் அடாவடி செய்த இந்தோனேசியப் பெண்
March 27, 2026, 12:54 pm
பள்ளிவாசல் அருகே அதிர்ச்சி சம்பவம்: அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல்
March 27, 2026, 12:52 pm
