செய்திகள் வணிகம்
அரசாங்கத்தின் முயற்சியால் டாலரை மண்டியிடச் செய்த மலேசிய ரிங்கிட்: பொருளாதாரப் புயலில் சிக்கிய இந்தியா
கோலாலம்பூர்:
மேற்காசிய பதற்றங்களுக்கு மத்தியில் நிதி ஒழுக்கம், வாழ்க்கை செலவீனங்களின் கவலைகளைச் சமநிலைப்படுத்தும் வகையில் எரிபொருள் மானியங்களில் நடைமுறை அணுகுமுறையை மலேசியா அரசாங்கம் செயல்படுத்தியதால், தொடர்ந்து நான்காவது நாளாக ரிங்கிட் உயர்வுடன் திறக்கப்பட்டது.
வியாழக்கிழமை 3.9920/9955 ஆக மூடியதிலிருந்து உள்ளூர் நாணயம் அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9855/4.0050 ஆக வலுப்பெற்றது.
நேற்று வெளியிட்ட சிறப்பு அறிக்கையில், ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்காசியாவில் தொடரும் மோதலை தொடர்ந்து பூடி95 வாங்குவதற்கான தனிநபர் மாதாந்திர வரம்பு முன்பு இருந்த 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராக தற்காலிகமாக சரிசெய்யப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அறிவித்தார்.
எனினும், மாதாந்திர சராசரி பயன்பாடு சுமார் 100 லிட்டராக இருப்பதாலும், கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் மாதம் 200 லிட்டருக்கும் குறைவாக பயன்படுத்துவதாலும் அரசாங்கத்தின் இந்த முடிவு பெரும்பாலான மக்களைப் பாதிக்காது.
மேலும், மலேசியாவின் எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அனுமதித்துள்ளதாகவும் அன்வர் தெரிவித்தார்.
மலேசிய முவமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மத் அப்ஸானிசம் அப்துல் ரஷித், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை உலக சந்தைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தினாலும், நிதி ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் குடும்பங்களுக்கான தாக்கத்தைக் குறைப்பதற்கும் இடையில் சமநிலை அடைய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
"ஈரான் யுத்தத்தின் தாக்கங்களை அரசாங்கம் கவனித்து சரியான நேரத்தில் பதில் அளித்திருப்பதால் இந்த முன்னேற்றம் ரிங்கிட்டிற்கு நேர்மறையாக இருக்கும்" என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே, SPI அசெட் மேனேஜ்மெண்ட்டின் நிர்வாக பங்காளர் ஸ்டீஃபன் இன்னஸ், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான சாத்தியமான தாக்குதலை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 10 நாட்கள் ஒத்திவைத்தது, அமெரிக்க டாலர் பாதுகாப்பான சொத்துக்களின் ஏற்றத்தின் வேகத்தைக் குறைத்ததாக கூறினார்.
"தாக்குதலை ஒத்திவைத்தது உண்மையான திசை மாற்றத்தை விட அழுத்தம் குறைவதாகவே செயல்படுகிறது. எனினும், அந்தக் காலகட்டம் முடிந்த பின்னர் பதற்றங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயத்தால் வார இறுதியை முன்னிட்டு வர்த்தக சந்தை வணிகர்கள் அமெரிக்க டாலரை வாங்குவதில் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கையாள வேண்டும்," என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, ரிங்கிட் மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும் வலுவாக திறக்கப்பட்டது. வியாழக்கிழமை மூடிய நிலையிலிருந்து ஜப்பானிய யென்னுக்கு எதிராக 2.5025/5049-லிருந்து 2.4951/5077 ஆகவும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.3301/3348-லிருந்து 5.3143/3403 ஆகவும், யூரோவிற்கு எதிராக 4.6140/6180-லிருந்து 4.5969/6194 ஆகவும் வலுப்பெற்றது.
ஆசியான் நாணயங்களுக்கு எதிராகவும் உள்ளூர் நாணயம் உயர்வாக வர்த்தகமானது. சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.1102/1132-லிருந்து 3.0994/1148 ஆகவும், தாய்லாந்து பாட்டிற்கு எதிராக 12.1529/1695-லிருந்து 12.0868/1566 ஆகவும் வலுப்பெற்றது. இந்தோனேசியா ரூபியாவிற்கு எதிராக 236.1/236.4-லிருந்து 235.7/237.0 ஆகவும், பிலிப்பைன்ஸ் பேசோவிற்கு எதிராக 6.62/6.63-லிருந்து 6.61/6.65 ஆகவும் சிறிதளவு உயர்ந்தது.
தொடர்ந்து, இந்திய ரூபாய் சரிவை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு ரிங்கிட்டிற்கு 23.51 காசாக விற்பனை செய்யப்படுகிறது. டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 94.20 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 7:10 am
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
June 22, 2026, 12:21 pm
மத்திய கிழக்கு பதற்றத்தால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு
June 18, 2026, 4:49 pm
கர்சர் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதால் கோடீஸ்வரராகும் இந்தியர், பாகிஸ்தான் இளைஞர்
June 15, 2026, 2:22 pm
போர் நிறுத்தம் எதிரொலி: சரிந்தது எண்ணெய் விலை
June 15, 2026, 12:24 pm
டுரியானின் அறுவடைக்காலம் தொடங்குகிறது: விலை ஏறலாம் என விற்பனையாளர்கள் கவலை
June 11, 2026, 6:06 pm
மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்: பணவீக்க அதிர்ச்சியால் தள்ளாடும் டாலர்
June 11, 2026, 6:01 pm
லக்சாவிலிருந்து கலை உலகம் வரை: மூன்று தலைமுறைப் பெண்களின் வெற்றிப் பயணம்
June 10, 2026, 10:39 am
வாடிக்கையாளர்களைக் கவர உணவகங்களை அதன் செயலியில் விளம்பரப்படுத்த கிராப் நிறுவனம் புதிய திட்டம்
June 8, 2026, 11:15 am
