நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“உறுதியான உத்தரவாதமின்றி தற்காலிக அமைதி பயனற்றது”: பிரதமர் அன்வார் வலியுறுத்தல்

கோலாலம்பூர்: 

எந்தவொரு தற்காலிக போர்நிறுத்தமும் உறுதியான உத்தரவாதங்களின்றி அமல்படுத்தப்பட்டால், அது மீண்டும் வன்முறைக்கான சுழற்சியையே உருவாக்கும் என மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

காசா, லெபனான் பகுதிகளில் கடந்த கால அனுபவங்கள் இதை தெளிவாக காட்டியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைதி முயற்சிகள், நீதியும், பொறுப்புணர்வும், நீடித்த உறுதிப்பாட்டும் ஆகிய அடிப்படைகளில் அமைய வேண்டியது அவசியம் என்றும், மேற்காசியாவில் நிலையான அமைதி உருவாக முழுமையான தீர்வு தேவைப்படுகின்றது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இது அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் மனித மரியாதையையும் மீட்டெடுக்க உதவும் என்றார்.

இந்நிலையிலேயே, ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார். போரின் முழுமையான முடிவை நிபந்தனையாகக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருப்பதையும் அவர் வரவேற்றார்.

மேலும், ஈரானில் உயிரிழந்த இராணுவர்கள், பொதுமக்களுக்கு அன்வார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களை அமெரிக்கா ஆதரிப்பதையும் மலேசியா கடுமையாக கண்டிப்பதாகவும், பொதுமக்களை குறிவைக்கும் எந்த நடவடிக்கையும் சர்வதேச சட்டத்தையும் மனிதநேயக் கொள்கைகளையும் மீறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset