நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லெமானே யமாலுக்கு குறிவைக்கும் பிஎஸ்ஜி அணி: 1.8 பில்லியன் ரிங்கிட்டை வழங்கத் தயார்

பாரிஸ்:

பிரான்ஸ் ஜாம்பவானான பிஎஸ்ஜி கிளப் இந்த கோடைக்கால வீரர் பரிமாற்ற சாளரத்தில் பார்சிலோனாவின் இளம் வீரரான லெமானே யமாலை ஒப்பந்தம் செய்ய, சுமார் 1.8 பில்லியன் ரிங்கிட் தொகையை வழங்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024-2025 ஐரோப்பிய சாம்பியன் லீக்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பிஎஸ்ஜி தங்கள் புதிய திட்டத்தில் யமாலை ஒரு முக்கிய வீரராக ஆக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.

லா மாசியா அகாடமியின் மாணவரான யமால், தனது 15 வயதில் ஏப்ரல் 2023ல் ரியல் பெத்திஸ் அணிக்கு எதிராக பார்சிலோனா முதல் அணிக்காக அறிமுகமானார்.

அதன்பிறகு, 18 வயதான அவர்  ஷாவி ஹெர்னாண்டஸ், ஹான்சி ஃபிளிக் ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் சிறந்து விளங்குகிறார்.

அவர் 155 போட்டிகளில் 46 கோல்களையும் 50 கோல் உதவிகளையும் பதிவு செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் மிகப் பெரிய தொகையில் அவரை ஒப்பந்தம் செய்ய பிஎஸ்ஜி முயற்சித்து வருகிறது.

முன்னதாக, பிஎஸ்ஜி யமாலின் சேவைகளைப் பெறுவதற்காக 1.25 பில்லியன் ரிங்கிட் தொகையை வழங்க முயன்றது.

ஆனால் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த போதிலும் பார்சிலோனா அந்த வாய்ப்பை நிராகரித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset