நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சரிவைச் சந்திக்கும் ஹரிமாவ் மலாயா: தரவரிசையில் பின்னடைவு

புக்கிட் ஜாலில்:

சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பு (FIFA), ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு (AFC) மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால், மலேசியாவின் ‘ஹரிமாவ் மலாயா’ அணியின் உலகத் தரவரிசை வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. 

ஏழு வெளிநாட்டு வீரர்களின் குடியுரிமை ஆவணங்களில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மலேசிய அணிக்குக் கடும் அபராதம், புள்ளிகள் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிஃபாவின் அண்மைக்காலத் தரவுகளின்படி, மலேசியா 14 இடங்கள் பின்வாங்கி தற்போது உலக அளவில் 135-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

முன்னதாக, முறையற்ற வீரர்களைப் பயன்படுத்தியதாகக் கூறி, கேப் வர்டே, சிங்கப்பூர், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு எதிராக மலேசியா விளையாடிய நட்பு ரீதியிலான போட்டிகளின் முடிவுகளைப் பிஃபா ரத்து செய்தது. இதன் விளைவாக, மலேசியா 116-ஆவது இடத்திலிருந்து 121-ஆவது இடத்திற்கு ஏற்கனவே தள்ளப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில், ஆசியக் கால்பந்து கூட்டமைப்பும் (AFC) மலேசியாவிற்கு எதிராகக் கடுமையான முடிவை எடுத்துள்ளது. வியட்நாம், நேபாளத்திற்கு எதிரான ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் அதே வீரர்கள் பங்கேற்றதால், அந்தப் போட்டிகளில் மலேசியா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இத்தீர்மானத்தினால் மலேசியாவின் தரவரிசைப் புள்ளிகள் பெருமளவில் குறைக்கப்பட்டதோடு, 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் மலேசியா இழந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, தகுதியற்ற வீரர்களைப் பயன்படுத்திய விவகாரத்தில் ஹரிமாவ் மலாயா அணி 19 இடங்கள் சரிந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகள் மலேசியக் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset