நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியில்  மென்செஸ்டர் சிட்டி அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

வெம்பிளி அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் அர்செனல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை நிகோ ஒ ரெய்லி அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியின் கரபாவ் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.

இதன் மூலம் மென்செஸ்டர் சிட்டி அணியினர் அக்கிண்ணத்தை 9ஆவது முறையாக வென்று சாதித்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset