நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

முக்கிய தருணத்தில் நிகழ்ந்த தவறு: ஆர்செனலின் கோப்பை கனவு தகர்ந்தது

லண்டன்: 

ஆர்செனல் அணியின் மேலாளர் மிக்கேல் ஆர்டெட்டா, லீக் கப் இறுதிப் போட்டியில் கோல்கீப்பரின் தவறால் ஆர்செனல் அணி மான்செஸ்டர் சிட்டியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது என தெரிவித்தார். 

இரண்டாம் பாதியில் நடந்த முக்கிய தருணத்தில், ரயான் செர்கியின் பந்தை கெப்பா சரியாக கையாளாமல் விட்டதால், நிக்கோ ஓ'ரெய்லி எளிதாக முதல் கோலைப் பதிவு செய்தார்.

இந்த நான்கு நிமிடங்களில், அவர் மீண்டும் கோல் அடித்து சிட்டியின் வெற்றியை உறுதி செய்தார்.

லீக் கப் தொடரில் முழுவதும் கெப்பாவையே முதன்மை கோல்கீப்பராக பயன்படுத்தியதாகக் கூறிய ஆர்டேட்டா, வழக்கமான கோல்கீப்பர் டேவிட் ராயாவை மாற்றி அவர்மீது நம்பிக்கை வைத்ததாக விளக்கினார்.

“இத்தகைய தவறுகள் கால்பந்தின் ஓர் அங்கமே; ஆனால் இன்று அது முக்கிய தருணத்தில் ஏற்பட்டது வருத்தமளிக்கிறது,” என அவர் தெரிவித்தார்.

இப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் 2020க்குப் பிறகு முதல் முக்கிய கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருந்தும், தற்போது லீக்கில் ஒன்பது புள்ளிகள் முன்னிலையில் இருக்கும் ஆர்செனல், அந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாமல் தவறிவிட்டது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset