செய்திகள் மலேசியா
சமூக வலைதளங்களின் வைரலாகும் மெரு ராயா தீயணைப்பு வீரர்களின் நகைச்சுவையானக் காணொலிகள்
ஈப்போ:
தீயை அணைத்து, உயிர்களை காப்பாற்றும் கடின பணிகளுக்கு இடையில், மெரு ராயா தீயணைப்பு நிலைய வீரர்களின் நகைச்சுவையான காணொலிகள் சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது
வெளிநாடுகளில் வெளியான காணொலிகளை பார்த்ததன் பின்னர், எளிய விஷயங்களை மனிதர்களின் நடத்தையால் சிக்கலாக்கும் நிலையை அடிப்படையாகக் கொண்டு, அதனை உள்ளூர் சூழலுக்கேற்ப நகைச்சுவை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தக் காணொலிகளின் முக்கிய கருத்து, மனிதர்களின் தவறான அணுகுமுறை காரணமாக எளிய விஷயங்களே தேவையில்லாமல் சிக்கலாக மாறுகின்றன என்பதைக் காட்டுவதாகும். அதே நேரத்தில், அன்றாட வாழ்க்கையில் நேர்மை, பொறுப்புணர்வு முக்கியம் என்பதையும் வலியுறுத்துகின்றது.
ஓய்வு நேரங்களில் பதிவு செய்யப்பட்ட இக் காணொலிகள் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. டிக்டாக் கணக்கில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களும், மில்லியன் கணக்கான பார்வைகளும் பதிவாகியுள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 11:49 am
சுட்டெரிக்கும் வெயிலில் உடலைக் குளிர்ச்சியாக்கும் இயற்கை பானம்
March 25, 2026, 11:08 am
டீசல் விலை உயர்வின் தாக்கம்: வட மாநிலங்களில் 100 சுற்றுலாப் பேருந்து நிறுவனங்கள் முடங்கும் அபாயம்
March 25, 2026, 11:07 am
பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு பாதுகாப்பு அரணாக நின்ற அந்நியர்கள்
March 25, 2026, 10:21 am
சண்டாகனில் தீ விபத்து: 77 வயதான மூதாட்டி உயிரிழப்பு
March 25, 2026, 9:51 am
மலேசிய எல்லை சோதனையில் சிக்கிய 7 வெளிநாட்டவர்கள்: நுழைவு மறுக்கப்பட்டது
March 24, 2026, 9:16 pm
அல்-குர்ஆனை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்
March 24, 2026, 5:46 pm
