செய்திகள் மலேசியா
மேற்கு ஆசியாவில் உள்ள சர்ச்சைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் மலேசியா உறுதியாக உள்ளது: பிரதமர்
புத்ராஜெயா:
வட்டாரத்தில் அதிகரித்து வரும் பதற்றங்களைத் தணிப்பதற்காக, மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து சர்ச்சைகளும் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் மலேசியா உறுதியாக உள்ளது.
மனிதநேயத்தின் கோரிக்கைகள் மற்றும் உலகளாவிய நீதியின் கோட்பாடுகளுக்கு இணங்க, பதற்றங்களைத் தணித்து ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு, நாடுகளுக்கு இடையேயான உரையாடல், ராஜதந்திரம், நெருங்கிய ஒத்துழைப்பு ஆகியவையே ஒரே வழி என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இன்று பஹ்ரைன் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் சல்மான் ஹமத் அல் கலீஃபா, ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது சயீத் அல் நஹ்யான் ஆகியோருடன் தொலைபேசி உரையாடல் நடத்திய பின்னர், அவர் தனது முகநூல் பதிவில் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
தொடர்ந்து நிலவி வரும் பதட்டங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு, மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றில் அவற்றின் தாக்கங்கள் குறித்து நான் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறேன்.
அத்துடன், பதிலடித் தாக்குதல்களின் விளைவாக ஏற்பட்ட உயிர் இழப்புகள், சொத்து சேதங்களுக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
வட்டார பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து விவாதித்ததோடு, தானும் இரு தலைவர்களும் பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும், தத்தம் நாடுகளில் உள்ள மக்களுக்கு நல்வாழ்வு, அமைதி மற்றும் செழிப்புக்காகப் பிரார்த்தனை செய்ததாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து பிராந்திய பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 9:16 pm
அல்-குர்ஆனை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்
March 24, 2026, 5:46 pm
கெடாவின் சுல்தான், அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர் அரசு ஊழியர்களுடன் அய்டில்ஃபித்ரி வரவேற்பு
March 24, 2026, 5:44 pm
"நடுக்கடலில் எரிபொருள் கொள்ளையா?": மலேசியக் கடற்பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் சிறைபிடிப்பு
March 24, 2026, 5:40 pm
மலேசியா வரலாற்றிலேயே மிகவும் கடுமையான எல் நினோ வெப்பத்தால் தாக்கப்பட உள்ளது
March 24, 2026, 5:39 pm
சபாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை; விநியோகத்தில் தாமதம் மட்டுமே: அர்மிசான்
March 24, 2026, 5:12 pm
