நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சண்டாகனில் தீ விபத்து: 77 வயதான மூதாட்டி உயிரிழப்பு

சண்டாகன்: 

கம்போங் முமியாங் பகுதியில் நீர்மீது அமைந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 77 வயதான ஒருவர் கருகிய நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.

போலிஸ் உதவி படையினர் சம்பவ இடத்துக்கு சென்றபோது, பாதிக்கப்பட்டவர் லீ துங் மோங் என அடையாளம் காணப்பட்டார்.

தீ விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததும், தீயணைப்பு படையினர் உடனடியாகச் செயல்பட்டனர். ஆனால் நிலப்பாதை இல்லாத காரணத்தால் கடல் வழியே செல்ல வேண்டியிருந்தது. கடல் நீர் குறைந்திருந்ததால், கடல்சார் அமலாக்க அதிகாரிகளின் படகு உதவி பெறப்பட்டது.

தீயை முதலில் கிராம மக்கள் கட்டுப்படுத்திய நிலையில், பின்னர் வந்த தீயணைப்பு படையினர் தீச்சுடரை முழுமையாக அணைத்து உடலை மீட்டனர். உடல் மேலதிக விசாரணைக்காக போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset