நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய எல்லை சோதனையில் சிக்கிய 7 வெளிநாட்டவர்கள்: நுழைவு மறுக்கப்பட்டது

புக்கிட் காயு ஹித்தாம்: 

எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பின் கடுமையான சோதனையின்போது, ஏழு வெளிநாட்டவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இவர்களில் ஆறு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள் எனத் தவறான தகவல் வழங்கியதும், செல்லுபடியாகாத திரும்பும் விமானச் சீட்டுகளை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

மேலும், பயண நோக்கம் குறித்து நம்பகமான விளக்கம் அளிக்க முடியாததால், அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரே விவரங்களுடன் விமானச் சீட்டுகள் வைத்திருந்தது மூலம் அவர்கள் இணைந்து செயல்பட்டது உறுதியாகியது.

இதற்கு இணையாக, கம்போடியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் முரண்பட்ட தகவல்களை வழங்கியதன் காரணமாக நாட்டில் நுழையும் அனுமதியை  மறுக்கப்பட்டார்.

அதிகாரிகளை ஏமாற்ற முயற்சிப்பது கடுமையான குற்றமாகக் கருதப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset