செய்திகள் வணிகம்
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
பெங்களூரு:
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை அன்று ஒரு சதவீதத்திற்கும் மேலாகச் சரிவைக் கண்டுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதும், அமெரிக்க மத்திய வங்கி (Fed) வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் மங்கியதும் இந்த விலைச் சரிவுக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
பெங்களூரில் தங்கத்தின் விலை 1.6 சதவீதமாகக் குறைந்து, 4,335.18 அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதிக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த விலையாகும்.
ஈரான், இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் பணவீக்கத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்கள் விஷயத்தில் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கின்றன.
இதன் விளைவாக முதலீட்டாளர்கள் தங்கத்தை விட அமெரிக்க டாலரைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர். கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து தற்போது வரை தங்கத்தின் விலை சுமார் 18 சதவீதம் வரை சரிவடைந்துள்ளதும், அதே வேளையில் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக வந்த செய்திகளை ஈரான் மறுத்துள்ளது. எனினும், இந்தப் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரடிப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்த வாரத்திலேயே தொடங்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய அரசியல் மாற்றங்கள், பொருளாதாரக் காரணிகளால் உலகளாவிய தங்கச் சந்தையில் நிலையற்ற சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
மலேசியாவில் இன்று ஆபரணத்தங்கம் 916 ஒரு கிராம் 531 ரிங்கிட்டிற்கு விற்பனை ஆனது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
