செய்திகள் வணிகம்
ஓய்வூதியச் சேமிப்பை இரட்டிப்பாக்க வழிமுறைகள்: நிபுணர்களின் ஆலோசனை
கோலாலம்பூர்:
ஊழியர் சேமநிதி வாரியத்தின் (KWSP) உறுப்பினர்கள், தங்களின் ஓய்வூதியக் காலச் சேமிப்பை அதிகப்படுத்தும் நோக்கில், 'உறுப்பினர் முதலீட்டுத் திட்டத்தின்' கீழ் அங்கீகரிக்கப்பட்ட யூனிட் டிரஸ்ட் (Unit Trust) எனப்படும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன்படி, உறுப்பினர்கள் தங்களின் கணக்கு 1-இல் உள்ள அடிப்படைச் சேமிப்பிற்கு மேலதிகமாக உள்ள தொகையில் 30 விழுக்காடு வரை மட்டுமே முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
ஓய்வூதியச் சேமிப்பைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முதலீட்டு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதித்துறை நிபுணர் டாக்டர் அஹ்மத் டானியல் ஜைனுதீன், இத்திட்டம் சேமநிதி வாரியத்தின் பங்களிப்பை மாற்றுவதற்கு அல்ல என்றும், மாறாக உறுப்பினர்கள் தங்களின் முதலீடுகளைப் பன்முகப்படுத்தி கூடுதல் லாபத்தைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2025-ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம், வழக்கமான, சிரியா சேமிப்புகளுக்கு 6.15 விழுக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 6.30 விழுக்காட்டை விட சற்றே குறைவு என்றாலும், இத்தகைய சிறிய மாற்றங்கள் உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பை வேறு முதலீடுகளுக்கு மாற்றத் தூண்டும் முக்கிய காரணியாக இருக்காது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
உறுப்பினர்களின் அடிப்படைச் சேமிப்பு சேமநிதி வாரியத்திலேயே இருப்பதை உறுதி செய்யும் வகையில் இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
