செய்திகள் உலகம்
பணியாத ஈரான்: வேறுவழியின்றி 48 மணி நேரக் காலக்கெடுவைக் கைவிட்டார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அவர் ஈரானுக்கு விதித்த 48 நேரக் காலக்கெடுவை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
முதலில் ஈரானை மிரட்டிப் பணிய வைக்க முயன்றார். இப்போது போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் பேச்சு நடப்பதாக அவர் கூறுகிறார்.
அந்தப் பேச்சு ஆக்ககரமாக அமைந்திருப்பதாகவும் அதிபர் டிரம்ப் சொன்னார்.
முழுமையாகப் போரை நிறுத்திவிடுவது பற்றிப் பேச்சு நடப்பதாக அவர் கூறினார்.
அதன் தொடர்பில் அவர் தமது TruthSocial சமூக ஊடகத்தில் பதிவிட்டிருக்கிறார்.
"அமெரிக்காவும் ஈரானும் கடந்த இரண்டு நாள்களாக மத்திய கிழக்கில் நிலவும் போருக்கு முழுமையான, ஒட்டுமொத்த தீர்வு காண்பது குறித்து மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்," என்றார் டிரம்ப்.
"இந்த வாரம் முழுவதும் தொடரவிருக்கும் ஆழமான, விரிவான, ஆக்கபூர்வமான இந்தப் பேச்சுவார்த்தைகளின் போக்கைக் கருத்தில் கொண்டு, ஈரானிய மின் நிலையங்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாள்களுக்கு ஒத்திவைக்குமாறு நான் போர் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.
இது தற்போது நடைபெற்று வரும் சந்திப்புகள், விவாதங்களின் வெற்றியைப் பொறுத்தது," என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் தாம் பேசுவதைக் கவனித்ததற்கும் அவர் நன்றி சொன்னார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 4:27 pm
புனித மக்கா ரமலான் சிறப்பு: 33.8 மில்லியன் மக்களுக்கு இப்தார் விருந்து
March 23, 2026, 3:58 pm
ஈரானில் உள்ள தப்ரிஸ் நகரில் நடந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு
March 23, 2026, 3:56 pm
லாகார்டியா விமான நிலையத்தில் பரபரப்பு: ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானது
March 23, 2026, 11:27 am
துருக்கியில் திடீர் நிலச்சரிவு: மழையில் புதைந்த கார்
March 23, 2026, 11:26 am
மத்திய கிழக்கு போரின் தாக்கம்: உலக பொருளாதாரத்திற்கு பெரிய அச்சுறுத்தல்
March 22, 2026, 4:55 pm
