நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

"ஈரான் விவகாரத்தில் டிரம்ப் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்": அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் அறிவிப்பு

வாஷிங்டன்:

ஈரான் உடனான மோதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், அவர் கடும் பதற்றத்தில் இருப்பதாகவும் அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்ஃபி குற்றம் சாட்டியுள்ளார். 

அமெரிக்க செனட்டின் வெளியுறவு உறவுகள் குழுவின் முக்கிய உறுப்பினரான கிறிஸ் மர்ஃபி, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் நான்காவது வார இராணுவ நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கச் சம்மதிக்காவிட்டால், அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அழித்துவிடுவேன் என அதிபர் டிரம்ப் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். 

டிரம்பின் இந்த நடவடிக்கையை 'பைத்தியக்காரப் போர்' என கருதிய மர்ஃபி, இத்தகைய தேவையற்ற மோதல்கள் உலக அளவில் எரிபொருள் விலையை உயர்த்தி, அமெரிக்கப் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாகப் பாதிப்பதாக எச்சரித்துள்ளார்.

அதிபர் டிரம்பின் திட்டமிடப்படாத இராணுவச் செயல்பாடுகள் நாட்டின் பாதுகாப்புக்கும் பொருளாதார நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக மாறி வருவதாக மர்ஃபி சுட்டிக்காட்டினார். 

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த மோதல் போக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என அந்நாட்டு அதிபர்கள் பலரும் தற்போது குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset