நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லாகார்டியா விமான நிலையத்தில் பரபரப்பு: ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானது

நியூயார்க்: 

அமெரிக்காவின் லாகார்டியா விமான நிலையத்தில், ஏர் கனடா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று தரையிறங்கிய பொழுது எதிர்பாராத விதமாக அங்கிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து நியூயார்க் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இரவு 11:38 மணியளவில் ஓடுதளத்தில் நின்றிருந்த வாகனத்தின் மீது விமானம் மோதியதாகத் தகவல் கிடைத்ததும், நியூயார்க் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இவ்விபத்தினால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் அல்லது காயமடைந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த விபத்தின் தாக்கத்தால் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக லாகார்டியா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக விமானப் போக்குவரத்து நிர்வாகத் துறை அறிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset