நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

24 மணி நேரத்தில் நிலைகுலைந்த இஸ்ரேல்: 303க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

டிமோனா:

ஈரான், ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தீவிரத் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 303 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இரு தரப்பிற்கும் இடையே போர் மூண்டுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் அனைவரும் அவசர சிகிச்சைக்காகப் பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் எட்டு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், 29 பேருக்கு நடுத்தர அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

மேலும், போர்ச் சூழலால் ஏற்பட்ட கடும் மன உளைச்சல், அதிர்ச்சி காரணமாக 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த மோதல் தொடங்கியது முதல் தற்போது வரை, இஸ்ரேலில் மொத்தம் 4,564 பேர் போரினால் பாதிக்கப்பட்டுக் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. 

தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்புகள், காயமடைபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தற்போது இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஈரான், ஹிஸ்புல்லாவின் இந்த அதிரடித் தாக்குதலால் அப் பகுதியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset