செய்திகள் உலகம்
மத்திய கிழக்கு போரின் தாக்கம்: உலக பொருளாதாரத்திற்கு பெரிய அச்சுறுத்தல்
சிட்னி:
மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் போரின் காரணமாக உருவான எரிசக்தி நெருக்கடி, உலக பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சர்வதேச ஆற்றல் அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த நிலைமையிலிருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது என அதன் தலைவர் ஃபாத்திஹ் பிரோல் தெரிவித்துள்ளார்.
இந்நெருக்கடியை 1970களின் எண்ணெய் நெருக்கடியும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட ரஷ்யா–உக்ரைன் மோதலின் விளைவுகளும் ஒன்றாக இணைந்த நிலையாக அவர் ஒப்பிட்டார். தற்போதைய சூழல் உலகளாவிய பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கக்கூடியதாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலை தொடர்ந்தால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்படும் என்பதால், இதை சமாளிக்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையில், அமெரிக்கா, ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து, ஹார்முஸ் நீரிணை தொடர்பான பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
உலக எண்ணெய், எரிவாயு விநியோகத்தின் சுமார் 20 சதவீதம் கடந்து செல்லும் ஹார்முஸ் நீரிணை பாதை மறிக்கப்பட்டதால், எரிபொருள் கடத்தல் பாதிக்கப்பட்டு, உலகளவில் எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 11:27 am
துருக்கியில் திடீர் நிலச்சரிவு: மழையில் புதைந்த கார்
March 22, 2026, 4:55 pm
சூடான் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல்: 13 குழந்தைகள் உட்பட 64 பேர் பலி
March 22, 2026, 1:40 pm
சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் ராயல் கிங்ஸ் குழுமம்: பிரம்மாண்ட நோன்புத் திறப்பு நிகழ்வு
March 22, 2026, 12:18 pm
சிதைந்த நிலையில் காசா: கண்ணீரில் நனைந்த ஈகைத் திருநாள்
March 22, 2026, 11:44 am
தொழில்நுட்ப கோளாறு: கத்தார் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
March 22, 2026, 10:26 am
