நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் வெப்பம் அதிகரித்து வருகிறது; ஒரு மாதமாக மழை பெய்யவில்லை: மன்சோர் ஜக்காரியா

கூலிம்:

ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்யாததால் கெடா தொடர்ந்து நீடித்த வெப்பமான காலநிலையை எதிர்கொண்டு வருகிறது.

தற்போது தினசரி வெப்பநிலை அதிகரித்து, பெரும்பாலான பகுதிகளில் உணரப்படுகிறது.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (மெட்மலேசியா) தகவல்களின்படி, பாடாங் தெராப் மாவட்டம் தற்போது இரண்டாம் நிலையில் (வெப்ப அலை) உள்ளது.

அங்கு வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை நிலவுகிறது என்றும் மாநில வீட்டுவசதி, உள்ளாட்சி சுகாதார துறையின் ஆட்சிக் குழு உறுப்பினர்  மன்சோர் ஜக்காரியா தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கெடாவில் தற்போது வெப்பமான வானிலை அதிகமாக உள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்யாததால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கெடாவில் வானிலை வெப்பமாக உள்ளது.

எனவே, இந்த பண்டிகை காலத்தின் போது நண்பர்களைச் சந்திப்பது அல்லது பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்குமாறு பொதுமக்களுக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்.

மக்கள் அதிக வெப்பநிலைக்கு ஆளாகி, அதனால் வெப்பத்தாக்கம் ஏற்படக்கூடும் என்று நான் கவலைப்படுகிறேன்.

நீரிழப்பைத் தவிர்க்க நிறைய சுத்தமான தண்ணீர் குடியுங்கள். மேலும், சர்க்கரை பானங்களைத் தவிர்த்திடுங்கள்.

ஏனெனில் அவை நமக்கு அதிக தாகத்தை உண்டாக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset