நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருமழையில் தவித்த குடும்பத்திற்கு உதவிய போக்குவரத்துத் துறை அதிகாரிகள்

உலு சிலாங்கூர்: 

வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கனமழை பெய்து கொண்டிருந்த வேளையில், ஆபத்தான நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு இளம் குடும்பத்திற்கு சிலாங்கூர் மாநிலப் போக்குவரத்துத் துறை (JPJ) அதிகாரிகள் உதவிய நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றது. 

கடந்த வியாழக்கிழமை மாலை 6:45 மணியளவில் பெருநாள் காலக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கனமழையினால் சாலை மறைவாகத் தெரிந்த நிலையில், மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஒரு தம்பதியினர் தங்களது மூன்று சிறு குழந்தைகளுடன் எவ்விதப் பாதுகாப்பும் இன்றிப் பயணிப்பதைக் கண்ட அதிகாரிகள், உடனடியாகத் தங்களது ரோந்து வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு உதவினர்.

அக்குடும்பத்தினர் மழையையும் பொருட்படுத்தாமல் பெருநாளைக்கான ஆடைகளை வாங்கச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

பாதுகாப்பு அபாயத்தை உணர்ந்த அதிகாரிகள், அந்தத் தாயையும் மூன்று குழந்தைகளையும் தங்களது ரோந்து வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். 

ஒரு அரசு ஊழியராகத் தங்களது கடமையைத் தாண்டி, மனிதாபிமானத்தோடு செயல்பட்ட அந்த அதிகாரிகளின் செயலைப் பொதுமக்களும் சிலாங்கூர் மாநிலப் போக்குவரத்துத் துறை இயக்குநரும் பாராட்டியுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset