நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்பத்தினால் உயிரிழப்பு அபாயம்: பேராசிரியர் டாக்டர் ஷரீஃபா எசாத்தின் எச்சரிக்கை

கோலாலம்பூர்: 

மலேசியாவின் பல மாநிலங்களில் வீசி வரும் கடுமையான வெப்ப அலை, குறிப்பாக சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களுக்குப் பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கும் திறன் இவர்களுக்குக் குறைவாக இருப்பதால், நீர்ச்சத்து குறைபாடு, வெப்ப வாதம் (Heat Stroke) ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார நிபுணர் பேராசிரியர் டாக்டர் ஷரீஃபா எசாத் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்குச் சாதாரணக் காய்ச்சல் இருக்கும் வேளையில், சுற்றுப்புற வெப்பமும் அதிகரித்தால் அது நிலையை மோசமாக்கும் என்பதால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

காய்ச்சல் என்பது கிருமித் தொற்றால் ஏற்படுவது. ஆனால் வெப்ப அலையினால் ஏற்படும் பாதிப்பு என்பது வறண்ட, உயர் வெப்பநிலையின் விளைவாகும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, பொதுமக்கள் தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும், வீடுகள், வாகனங்களில் காற்றோட்ட வசதியை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

பகல் நேரங்களில் வெளிப்புற விளையாட்டுகளைத் தவிர்ப்பதுடன், அடிக்கடி குளிப்பதன் மூலமும், அதிகளவு நீர் அருந்துவதன் மூலமும் உடல் வெப்பத்தைத் தணிக்க முடியும். உடல் நலனில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் காலதாமதமின்றி சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset