செய்திகள் மலேசியா
ஆலயம் காரணமாக புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படுமா?: அவதூறுக்கு எதிராக போலிசில் புகார்
செபராங் பிறை:
ஆலயம் காரணமாக புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படும் என்று அவதூறான கூற்றுகளைப் பரப்பிய முகநூல் பயனர் குறித்து விசாரிக்குமாறு புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை வருகையாளர்கள் வாரியக் குழு போலிசில் புகார் செய்துள்ளது.
ஆலயத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படும் என புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் கூறியதாக அந்த முகநூல் பதிவு கூறுகிறது.
இந்த பதிவை மறுத்த வாரியம் குழு இது குறித்து போலிஸ் புகார் செய்ததை முகநூலில் உறுதிப்படுத்தியது.
கடந்த செப்டம்பர் 14 அன்று மருத்துவமனைக்கு சிம் மேற்கொண்ட பயணத்தின்போது ஆலயப் பிரச்சினை குறித்து அவர் பேசவே இல்லை.
அந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் வசதிகளை மேம்படுத்துவது, குறிப்பாக 2023ஆம் ஆண்டிலிருந்து பணிகள் நடைபெற்று வரும் ஒரு கூடுதல் கட்டிடம் கட்டுவது குறித்ததாகும்.
இதில் மருத்துவமனை கட்டிடத்தை இடமாற்றம் செய்யும் பிரச்சினை எதுவும் இல்லை.
ஆனால் ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டுவதற்கான திட்டம் உள்ளது.
மேலும் பழைய கட்டிடம் எந்த இடமாற்றமும் இன்றி அப்படியே இருக்கும்.
சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அவதூறு அறிக்கைகள், இன, மத ரீதியான தூண்டுதல் கூறுகளைத் தெளிவாகக் கொண்டுள்ளன.
அவை சமூக நல்லிணக்கத்தைப் பாதித்து, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஆகவே இவ்விவகாரத்தை போலிஸ் விசாரித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாரியக் குழு கேட்டுக் கொண்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 6:44 pm
பெருநாள் கொண்டாட்டங்களின் போது அந்நிய நாட்டினர் மீது ஏன் சோதனை நடத்தப்படுகிறது?: ஜைட் இப்ராஹிம்
March 23, 2026, 6:43 pm
கெடாவில் வெப்பம் அதிகரித்து வருகிறது; ஒரு மாதமாக மழை பெய்யவில்லை: மன்சோர் ஜக்காரியா
March 23, 2026, 4:56 pm
பெருமழையில் தவித்த குடும்பத்திற்கு உதவிய போக்குவரத்துத் துறை அதிகாரிகள்
March 23, 2026, 4:28 pm
வெப்பத்தினால் உயிரிழப்பு அபாயம்: பேராசிரியர் டாக்டர் ஷரீஃபா எசாத்தின் எச்சரிக்கை
March 23, 2026, 3:54 pm
பெர்லிஸில் கடும் வறட்சி: அணைக்கட்டு நீர்மட்டம் பெருமளவில் சரிந்துள்ளது
March 23, 2026, 3:14 pm
மேற்கு ஆசிய மோதல்களைத் தொடர்ந்து மருந்து விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது: சுகாதார அமைச்சு
March 23, 2026, 3:12 pm
