நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிய ஷா ஆலம் பகுதியில் அதிரடிச் சோதனை

ஷா ஆலம்: 

சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடிவரவுத் துறையினர் மேற்கொண்ட ‘ஆபரேஷன் ஆம்னிபிரசன்ட்’ (Op Omnipresent) எனும் அதிரடிச் சோதனையில், சுமார் 137 வெளிநாட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையானது, வெளிநாட்டவர்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகச் சிலாங்கூர் மாநில குடிவரவுத் துறை இயக்குநர் கைரூல் அமினுஸ் கமரூதீன் தெரிவித்தார்.

குறிப்பாக ஷா ஆலம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூடா சந்தை, டத்தாரான் ஓட்டோமொபில், டெர்மினல் 17, பாடாங் ஜாவா ஆகிய இடங்கள் இந்தச் சோதனையின் முக்கிய இலக்குகளாக இருந்தன.

பண்டிகைக் காலத்தில் பொது அமைதியைப் பேணவும், நாட்டின் குடிவரவுச் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் இச்சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையின் போது, குடிவரவுத் துறையின் அதிகாரப்பூர்வ வாகனங்களில் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டு அதிகாரிகள் தங்களின் இருப்பைப் பதிவு செய்தனர். 

இது பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வையும், கண்காணிப்புப் பணிகள் குறித்த நம்பிக்கையையும் ஏற்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடரும் இந்தச் சோதனையில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset