செய்திகள் உலகம்
சிதைந்த நிலையில் காசா: கண்ணீரில் நனைந்த ஈகைத் திருநாள்
காசா:
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் வேளையில், காசா பகுதியில் உள்ள மக்கள் கடும் உணவு, மருந்து பற்றாக்குறையிலும், துயரங்களுக்கும் மத்தியிலும் இப்பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
மலேசியாவிற்கு ஒரு நாள் முன்னதாகவே அங்கு பெருநாள் கொண்டாடப்பட்டாலும், மக்கள் பிளாஸ்டிக் தாள்களால் அமைக்கப்பட்ட தற்காலிகக் கூடாரங்களில் தொழுகை நடத்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மலேசிய-பாலஸ்தீன முஸ்லிம் கேர் அமைப்பின் தலைவர் அஹ்மத் ஆயிஷ் அல்நஜ்ஜார் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் தக்பீர் முழக்கங்களால் எதிரொலித்த பள்ளிவாசகள் இன்று இடிபாடுகளாகக் கிடக்கின்றன. குடும்பத்தினர், நண்பர்களின் சிரிப்பொலியால் நிறைந்திருந்த தெருக்கள் தற்போது நிசப்தமாகவும், சோகமாகவும் காட்சியளிக்கின்றன.
பலரின் வீடுகள் குண்டுவீச்சில் தரைமட்டமான நிலையில், ஆயிரக்கணக்கான உறவுகளையும் அண்டை வீட்டார்களையும் இழந்த துயரமே அங்கு எஞ்சியுள்ளது. உணவு, உடை, மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளே இன்று அங்கு ஆடம்பரமாகக் கருதப்படும் சூழல் நிலவுகிறது.
குண்டுச் சத்தங்களுக்கு மத்தியிலும், இறை நம்பிக்கையின் அடையாளமாக மக்கள் ஒன்று கூடித் தொழுகை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சிறிய அளவிலான இனிப்புகள், பிஸ்கட்டுகள், மலேசிய மக்களின் நிதி உதவியுடன் பண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
குழந்தைகளை மகிழ்விக்க கோமாளி வேடமிட்ட கலைஞர்களைக் கொண்டு சிறிய அளவிலான கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டாலும், இழந்த உயிர்களை நினைத்து மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
எதிர்வரும் காலங்களிலாவது அச்சமின்றி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தவும், பிரிந்திருக்கும் உறவுகளுடன் மீண்டும் இணையவும் விரும்புவதாகக் குறிப்பிட்ட அஹ்மத் ஆயிஷ், "நாங்கள் இன்னும் இங்குதான் இருக்கிறோம், எங்களை மறந்துவிடாதீர்கள்" என உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 22, 2026, 1:40 pm
சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் ராயல் கிங்ஸ் குழுமம்: பிரம்மாண்ட நோன்புத் திறப்பு நிகழ்வு
March 22, 2026, 11:44 am
தொழில்நுட்ப கோளாறு: கத்தார் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
March 22, 2026, 10:26 am
தெற்கு இஸ்ரேலில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்
March 21, 2026, 12:23 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் அமெரிக்காவின் F-35 ஸ்டெல்த் ஜெட்டை ஈரான் வீழ்த்தியது
March 21, 2026, 12:17 pm
அமெரிக்காவிற்கு 'இல்லை' என்று சொல்லும் துணிச்சலை இலங்கை காட்டுகிறது
March 21, 2026, 12:14 pm
"பண்டிகை இருக்கு.. ஆனால் கொண்டாட வழியில்லை": காசாவில் பொலிவிழந்த ஈகைத் திருநாள்
March 21, 2026, 9:29 am
தென் கொரியாவில் தொழிற்சாலை தீ விபத்து
March 21, 2026, 9:27 am
