செய்திகள் வணிகம்
வீட்டிலிருந்தே ஐந்து இலக்க வருமானம் ஈட்டும் இல்லத்தரசியின் சாதனை
சிரம்பான்:
43 வயதான இல்லத்தரசி ஸுரினா சைடோன்,, ஹரிராயா காலங்களில் பரிசுத் தொகுப்புகளைத் தயாரித்து, ஐந்து இலக்க வருமானம் ஈட்டிவருகிறார். முதலில் வீட்டிலிருந்து பகுதி நேரமாக தொடங்கிய இந்த முயற்சி, தற்போது இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட கடையாக வளர்ந்துள்ளது.
முன்னதாக தனியார்
மருத்துவமனையில் கணக்கு உதவியாளராக பணியாற்றிய அவர், கைவினைப் பொருட்களில் ஆர்வம் காரணமாக தலையணை, பென்சில் பெட்டி, உடை அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை தயாரித்து வந்தார்.
எந்த முறையான பயிற்சியும் இல்லாமல், பிறரைப் பார்த்தும் சமூக வலைதளங்களின் மூலம் கற்றும் இந்தத் திறனை வளர்த்துக் கொண்டார்.
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, குடும்பத்தைக் கவனிக்க வேலைவிட்ட அவர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் இந்தத் தொழிலை முழுமையாகத் தொடங்கினார். ஏற்கனவே இருந்த வாடிக்கையாளர்கள் ஆதரவுடன் தொழில் தொடர்ந்து வளர்ச்சி கண்டது.
ரமலான் தொடக்கம் முதல் ஹரிராயா வரை வரும் காலத்தில் அவரிடம் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்த அவர், தற்போது தனிக் கடை மூலம் வணிகத்தை விரிவுபடுத்தி, தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
