செய்திகள் மலேசியா
நாளை நோன்பு பெருநாள்: கிழக்கு கடற்கரை, பிளஸ் நெடுஞ்சாலைகளை கடும் போக்குவரத்து நெரிசல்
கோலாலம்பூர்:
நோன்பு பெருநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில் கிழக்கு கடற்கரை, பிளஸ் நெடுஞ்சாலைகளை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மலேசியாவில் நாளை நோன்பு பெருநாள் பண்டிகையைக் கொண்டாடப்படவுள்ளது.
இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருந்தது.
மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்,
காலை 8 மணி நிலவரப்படி, கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலை, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை ஆகிய இரண்டு முக்கிய இடங்களில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் இருந்தது.
மேலும் தெற்கு நோக்கிச் செல்லும் சாலைகள் உட்பட மற்ற வழித்தடங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
எல்பிடி நெடுஞ்சாலையில், வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்ததன் காரணமாக லெண்டாங், பென்டாங் இடையே போக்குவரத்து மெதுவாக இருந்தது.
கோலாலம்பூர் - காராக் நெடுஞ்ச்சாலையின் கிழக்கு திசையில், 48.1 கிலோ மீட்டர் முதல் 57.9 கிலோ மீட்டர் (புக்கிட் திங்கி) வரையிலான 9.8 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், மெதுவாகவும் சென்றது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 11:09 am
சந்தோஷமான பெருநாள்... சங்கடமான ஏமாற்றம்: மந்திரி ஃபஹ்மி ஃபாட்சில் விடுத்த எச்சரிக்கை
March 20, 2026, 11:07 am
மறுசுழற்சியில் ஒரு மாஸ்டர் பிளான்: கடல் கண்ட அழகிய பூங்கா
March 20, 2026, 10:13 am
பட்டாசு வெடித்த போது நிகழ்ந்த விபத்த்தில் இளைஞர் பலத்த காயங்களுக்கு இலக்கானார்
March 20, 2026, 10:11 am
சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் அவசரம் வேண்டாம்; விவேகமாக இருங்கள்: பகாங் சுல்தான்
March 19, 2026, 10:25 pm
குடும்ப வன்முறை: கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய கணவர் கைது
March 19, 2026, 10:23 pm
பெர்லிஸ் மாநிலத்தில் ‘ஓப்ஸ் பெரந்தாவ்' அமலாக்க திட்டம்
March 19, 2026, 9:51 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அலைபோல் திரண்ட வாகனங்களினால் நிரம்பிய முக்கிய நெடுஞ்சாலைகள்
March 19, 2026, 9:49 pm
