செய்திகள் மலேசியா
சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் அவசரம் வேண்டாம்; விவேகமாக இருங்கள்: பகாங் சுல்தான்
பெந்தோங்:
சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் அவசரம் வேண்டாம் என பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் வலியுறுத்தினார்.
மக்கள், குறிப்பாக ஹரி ராயா பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் செல்பவர்கள், சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகளில் எப்போதும் பொறுமையாகவும் கவனமாக இருக்க வேண்டும்.
காரணம் தற்போது, பல முக்கிய வழித்தடங்களில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பெருநாளை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியதால், நேற்று முதல் கிளாங் பள்ளத்தாக்கிலிருந்து கிழக்குக் கடற்கரையை நோக்கிச் செல்லும் போக்குவரத்து நெரிசலைக் கவலையுடன் வான்வழியாக ஆய்வு செய்ய சுல்தான் இதனை தெரிவித்தார்.
நீண்ட பயணங்களின் போது ஏற்படும் மன அழுத்தம் மற்றும் சோர்வைத் தவிர்ப்பதற்காக, சாலைப் பயனாளர்கள் வாகனம் ஓட்டும்போது எப்போதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தங்கள் பயணங்களை நன்கு திட்டமிட வேண்டும்.
அனைத்து சாலைப் பயனாளர்களும் பொறுமையுடன் இருக்கவும், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்கவும், தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் தங்கள் இலக்கைப் பாதுகாப்பாகச் சென்றடைய, பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 11:09 am
சந்தோஷமான பெருநாள்... சங்கடமான ஏமாற்றம்: மந்திரி ஃபஹ்மி ஃபாட்சில் விடுத்த எச்சரிக்கை
March 20, 2026, 11:07 am
மறுசுழற்சியில் ஒரு மாஸ்டர் பிளான்: கடல் கண்ட அழகிய பூங்கா
March 20, 2026, 10:37 am
நாளை நோன்பு பெருநாள்: கிழக்கு கடற்கரை, பிளஸ் நெடுஞ்சாலைகளை கடும் போக்குவரத்து நெரிசல்
March 20, 2026, 10:13 am
பட்டாசு வெடித்த போது நிகழ்ந்த விபத்த்தில் இளைஞர் பலத்த காயங்களுக்கு இலக்கானார்
March 19, 2026, 10:25 pm
குடும்ப வன்முறை: கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய கணவர் கைது
March 19, 2026, 10:23 pm
பெர்லிஸ் மாநிலத்தில் ‘ஓப்ஸ் பெரந்தாவ்' அமலாக்க திட்டம்
March 19, 2026, 9:51 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அலைபோல் திரண்ட வாகனங்களினால் நிரம்பிய முக்கிய நெடுஞ்சாலைகள்
March 19, 2026, 9:49 pm
