செய்திகள் மலேசியா
பட்டாசு வெடித்த போது நிகழ்ந்த விபத்த்தில் இளைஞர் பலத்த காயங்களுக்கு இலக்கானார்
சிரம்பான்:
கடந்த மார்ச் 12ஆம் தேதி போர்ட்டிக்சன் லுக்குட் பகுதியில் பட்டாசுகளை வெடித்த 17 வயது இளைஞர் ஒருவருக்கு, இரு செவிப்பறைகளும் சிதைந்ததுடன் மூக்கு முறிவு உள்ளிட்ட பலத்த காயங்கள் ஏற்பட்டன.
பாதிக்கப்பட்டவருக்கு விரல்கள், உள்ளங்கைகளில் காயங்களும், முகத்தில் சிறிய காயங்களும் ஏற்பட்டதாக நெகிரி செம்பிலான் போலிஸ் தலைவர் அல்சாஃப்னி அஹ்மத் தெரிவித்தார்.
நேற்று மாலை 6.17 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து போர்ட் டிக்சன் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
மார்ச் 12 அன்று இரவு சுமார் 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பர்களும் சுமார் 20 பட்டாசுகளை வெடித்ததாகவும்,
மேலும் ஒரு வலுவான வெடிப்பை ஏற்படுத்துவதற்காக, கம்பத்தில் உள்ள துளைக்குள் கந்தகத்தைத் தூவி ஒரு பட்டாசை வெடித்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் லைட்டரைப் பற்றவைக்க முயன்றபோது, ஒரு வலுவான வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக அவர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 11:09 am
சந்தோஷமான பெருநாள்... சங்கடமான ஏமாற்றம்: மந்திரி ஃபஹ்மி ஃபாட்சில் விடுத்த எச்சரிக்கை
March 20, 2026, 11:07 am
மறுசுழற்சியில் ஒரு மாஸ்டர் பிளான்: கடல் கண்ட அழகிய பூங்கா
March 20, 2026, 10:37 am
நாளை நோன்பு பெருநாள்: கிழக்கு கடற்கரை, பிளஸ் நெடுஞ்சாலைகளை கடும் போக்குவரத்து நெரிசல்
March 20, 2026, 10:11 am
சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் அவசரம் வேண்டாம்; விவேகமாக இருங்கள்: பகாங் சுல்தான்
March 19, 2026, 10:25 pm
குடும்ப வன்முறை: கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய கணவர் கைது
March 19, 2026, 10:23 pm
பெர்லிஸ் மாநிலத்தில் ‘ஓப்ஸ் பெரந்தாவ்' அமலாக்க திட்டம்
March 19, 2026, 9:51 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அலைபோல் திரண்ட வாகனங்களினால் நிரம்பிய முக்கிய நெடுஞ்சாலைகள்
March 19, 2026, 9:49 pm
